தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

26.2.18

மே 8இல் கோட்டையை நோக்கி பேரணி - ஜாக்டோ ஜியோ முடிவு

ஜாக்டோ - ஜியோ சார்பில், நான்கு நாட்களாக நடந்த மறியல் போராட்டம், ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ சார்பில், பிப்., 21 முதல், தொடர் மறியல் போராட்டம் நடந்தது.
சென்னையில், சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை முன், தினமும் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் மறியல் நடத்தினர்.அவர்களை போலீசார், காலையில் கைது செய்து, மாலையில் விடுவித்து வந்தனர்.

நேற்று முன்தினம், பிரதமர் மோடி, சென்னையில் பங்கேற்ற அரசு விழா நடந்த இடம் அருகே, நான்காவது நாளாக போராட்டம் நடத்தினர். இதனால், போலீசார், அவர்களை குண்டுக்கட்டாக கைது செய்தனர்.

இதையடுத்து, நேற்று முன்தினம் ஜாக்டோ - ஜியோ உயர் மட்டக் குழு கூடியது.  அதில் பள்ளி மாணவர்களுக்கு பொது தேர்வு முடிந்த பின், கோடை விடுமுறையில், மே, 8ல், கோட்டையை நோக்கி பேரணி செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, மார்ச், 24ல் மாவட்ட வாரியாக, ஆயத்த பேரணி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

24.2.18

ஜாக்டோ-ஜியோ சார்பில் சென்னையில் அரசு ஊழியர்கள் தொடர் மறியல்; சவம் போல் கிடந்து நூதனப் போராட்டம்

ஜாக்டோ - ஜியோ சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று பெண்கள் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுமார் 3000 பேர் பங்கேற்றனர். இதில் சவம் போல் கிடந்து ஓர் அரசு ஊழியர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது, இடைநிலை ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவினருக்கும் ஊதிய முரண்பாடுகளைக் களைவது, தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக அறிவிப்பது, சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஊராட்சி செயலர்களுக்கு தொகுப்பூதியத்தை நீக்கிவிட்டு காலமுறை ஊதியம் வழங்குவது 21 மாத ஊதியக்குழு நிலுவைத்தொகை அளிப்பது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை எதிரே பிப்.21-ம் தேதி முதல் தொடர் சாலை மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி, நான்காம் நாளான இன்று சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை எதிரே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சுமார் 3000 பேர் திரண்டனர்

கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட, ஓர் அரசு ஊழியர் சவம் போல் கிடந்து நூதன முறையில் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். அவரைச் சுற்றி இருந்த உறவினர்கள் அழுது, ஒப்பாரி வைத்து தங்கள் கவலையை வெளிப்படுத்தினர். சவம் போல் கிடந்த அரசு ஊழியர் வைத்திருந்த அறிவிப்பு வாசகத்தில் பணி ஓய்வுக்குப் பின் சிபிஎஸ் ஊழியர்களின் நிலை அனாதைப் பிணம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

முதல்வர் அல்லது துணை முதல்வர் போராட்டக் களத்திற்கு வந்து எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் வரை இந்த இடத்தை விட்டு கலைந்து செல்ல மாட்டோம் என்று போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

சென்னையில் நான்காவது நாளாக தொடரும் ஆசிரியர் அரசூளியர் மறியல் போர் - காணொளிக் காட்சிகள்


ஜாக்டோ - ஜியோ சென்னை மறியல் போர் செய்திகள்





பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்