தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

21.7.16

பட்டதாரி ஆசிரியர் பதவியுயர்வு தற்காலிக முன்னுரிமைப் பட்டியல் - புவியியல்

01 01 2016 Temporary Pannel - Geography

பட்டதாரி ஆசிரியர் பதவியுயர்வு தற்காலிக முன்னுரிமைப் பட்டியல் - வரலாறு

01 01 2016 Temporary Pannel - History

பட்டதாரி ஆசிரியர் பதவியுயர்வு தற்காலிக முன்னுரிமைப் பட்டியல் - ஆங்கிலம்

BT English Temp Panel as on 1.1.2016

7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த உயர்மட்ட குழு - நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. காலை 11 மணிக்கு பேரவையில் 2016-17-ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

அப்போது அவர், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது போல் தமிழக அரசு ஊழியர்களுக்கும் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை ஆராய்ந்து அமல்படுத்த உயர்மட்ட அலுவலர் குழு அமைக்கப்படும் என்று கூறினார்.
.

2016-17ஆம் நிதியாண்டிற்கான தமிழக வரவு-செலவு அறிக்கை

Card

20.7.16

பட்டதாரி ஆசிரியர் பதவியுயர்வு தற்காலிக முன்னுரிமைப் பட்டியல் - கணிதம்

SGT to BT Maths 01-01-2016 Temporary Panel

பொதுமாறுதல் அரசாணை - இயக்குனரின் செயல்முறைகள் - விண்ணப்பப் படிவம்

Transfer Counselling GO

வருங்கால வைப்பு நிதி வட்டி தொடர்பான அரசாணை

fin_e_209_2016

17.7.16

ஆசிரியர்கள் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு கால அட்டவணை 2016 -17

  • விண்ணப்பங்கள் ஜுலை 19 முதல் 28 வரை அளிக்கலாம்.
  • 6.8.16 - மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மாறுதல் கலந்தாய்வு
  • 7.8.16 - மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு
  • 13.8.16 - உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மாறுதல்
  • 20.8.16 - முதுகலை ஆசிரியர் மாறுதல் (மாவட்டத்திற்குள்)
  • 21.8.16 - முதுகலை ஆசிரியர் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்)
  • 22.8.16 - முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு
  • 23.08.16 - உடற்கல்வி, இடை நிலை, தையல் ஆசிரியர் மாறுதல் (மாவட்டத்திற்குள்)
  • 24.08.16 - உடற்கல்வி, இடை நிலை, தையல் ஆசிரியர் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்)
  • 27.8.16 முதல் 29.8.16 வரை பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல்
  • 03.9.16 - பட்டதாரி ஆசிரியர் மாறுதல் (மாவட்டத்திற்குள்)
  • 04.9.16 - பட்டதாரி ஆசிரியர் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்)
  • 06.9.16 - பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு
.

7.7.16

ஒரு பணியாளரின் பணிப் பதிவேட்டில் இருக்க வேண்டிய பதிவுகள்

1. முதல் பக்கத்தில் உங்களைப் பற்றிய முழு விபரம் இருக்க வேண்டும்.,
பெயர், தந்தை பெயர், முழுவிலாசம், கல்வித் தகுதி, மதம், இனம், தாய்மொழி போன்ற விபரங்கள். அத்துடன் மருத்துவத் தகுதிச் சான்றிதழும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

2. பணி நியமன முழு விபரம்.

3. பணி வரன்முறை படுத்தப்பட்ட விபரம்.

4. தகுதி காண் பருவம் முடிக்கப்பட்ட விபரம்.

5. GPF/TPF/CPS எண் விபரம்.

6. NHIS / SPF 1/SPF2 பிடித்தம் தொடங்கப்பட்ட / முடிக்கப்பட்ட விபரம்.

7. ஒவ்வொரு ஆண்டும் பணி சரிபார்ப்பு செய்யப்பட்ட விபரம் (Service Verification).

8. ஆண்டு ஊதிய உயர்வு அளிக்கப்பட்ட விபரம் .

9. மருத்துவ விடுப்பு / ஈட்டிய விடுப்பு / அரைச்சம்பள விடுப்பு / ஊதியமில்லா விடுப்பு போன்ற விடுப்புகள் எடுக்கப்பட்ட விபரம்.

10. ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்யப்பட்டவிபரம் (15 /30 நாட்கள்).

11. உயர்கல்வி படிக்க முனு அனுமதி / பின் ஏற்பு அளிக்கப்பட்ட விபரம்.

12. உயர்கல்வி தேர்ச்சி பெற்ற விபரம்.

13. சான்றிதழ்கள் உண்மைத் தன்மை பெறப்பட்ட விபரம்.

14. ஊக்க ஊதியம் வழங்கப்பட்டதற்கான முழுமையான ஆணை விபரம் ஊதிய நிர்ணய விபரத்துடன்.

15. தேர்வுநிலை / சிறப்பு நிலை வழங்கப்பட்ட விபரம் ஊதிய நிர்ணய விபரத்துடன்

16. ஊதியத்தில் எந்த மாற்றம் ஏற்பட்டாலும் அது பற்றிய முழு விபரம். எடுத்துக்காட்டாக தர ஊதியம் ரூ.2800 பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட தனி ஊதியம் ரூ.750மற்றும் 4300 தர ஊதியம் பெறுவோருக்கு சிறப்பு படி ரூ.500 வழங்கப்படும் விபரம்.

17. பதவி உயர்வு பெறும்போது தொடர்புடைய ஆணை பதிவு, புதிய பதவி பணி வரன் முறை செய்யப்பட்ட விபரம், 22B சான்று பெறப்பட்ட விபரம், பதவி உயர்வு ஊதிய நிர்ணய விபரம்.

18. பதவி உயர்வு பெறும் போது ஊதிய நிர்ணயம் செய்யப்படும் தேதி குறித்து தனியரின் விருப்பம் ஏதேனும் இருந்தால் அது பற்றிய பதிவு.

19. ஊதியக்குழு ஊதிய நிர்ணயம் முழு விபரம் மற்றும் தனியரின் விருப்பம் (option)குறித்த பதிவு.

20. வாரிசுதாரராக யாரை நியமனம் செய்திருக்கிறோம் என்பது பற்றிய விபரம்.

21. பொது மாறுதல்களில் வந்த விபரம்.
.

தரமான கல்விக்கு முக்கியத்துவம்: ஜாவடேக்கர் உறுதி

மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றுக்கொண்ட பிரகாஷ் ஜாவடேக்கர், தரமான கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் எனக் கூறினார்.

மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சராக இருந்த இவர், நேற்று முன்தினம் நடந்த மத்திய அமைச்சரவை மாற்றத்தின்போது, கேபினட் அமைச்சராக மாற்றப்பட்டார். அவருக்கு, ஸ்மிருதி இரானியிடமிருந்த மனித வள மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டது.

நேற்று அவர் ஸ்மிருதி இரானியை சந்தித்து பேசினார். இன்று தனது அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

பின்னர் அவர் கூறுகையில், மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக, தனது பணியில்அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். கல்வியின் தரத்தை அதிகரிப்பதில், அனைத்து மாநிலங்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கப்படும் எனக்கூறினார். மேலும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகே, கொள்கை முடிவுகள் குறித்து அறிவிக்கப்படும். இன்று தான் பொறுப்பேற்கும் நிகழ்ச்சியில் ஸ்மிருதி வராததற்கு, அவரது குடும்ப விவகாரம் தான் காரணம் என்றார்.
.

Some Inputs for Draft National Education Policy - 2016

Card

ஜூலை 30இல் 6, 7, 8 வகுப்பு ஆசிரியர்களுக்கு குறுவள மைய அளவில் பயிற்சி

அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்எஸ்ஏ), மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியன சார்பில் தொடக்க, நடுநிலை அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சி மாவட்ட வாரியாக வழங்கப்படுகிறது. இதுகுறித்து எஸ்எஸ்ஏ மாநிலத் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:

ஆசிரியர்களுக்கு குறு வள மைய அளவில் புரிதலை மேம்படுத்த புத்தாக்கப் பயிற்சி, படைப்பாற்றல் கல்வி முறையில் தொடர், முழுமையான மதிப்பீடு வலுவூட்டல் பயிற்சி ஆகிய தலைப்புகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.இதற்காக மாநில, மாவட்ட, வட்டார அளவில் கருத்தாளர்கள் பயிற்சி நடத்தப்பட வேண்டும்.

அதன்படி, மாநில அளவில் ஜூலை 7-இல் புத்தாக்கப் பயிற்சியும், 19-இல் தொடர் மதிப்பீடு வலுவூட்டல் பயிற்சியும், 11-இல் மாவட்ட வாரியாக அனைத்து ஆசிரியப் பயிற்றுநர்களுக்கும், ஆசிரியர் கருத்தாளர்களுக்கும் புத்தாக்கப் பயிற்சியும், 25-இல் வலுவூட்டல் பயிற்சியும், 16-இல் அனைத்துத் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கும், 30-இல் நடுநிலை ஆசிரியர்களுக்கும் குறுவள மைய அளவில் பயிற்சி வழங்கப்படவுள்ளது.இந்தப் பயிற்சிகளை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்களும் வழங்குவார்கள். இதற்கான ஏற்பாடுகளை மாவட்டக் கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

.

பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்