தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

11.11.13

மொஹரம் விடுமுறையில் மாற்றம்

மொஹரம் பண்டிகையை முன்னிட்டு வரும் 15ம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

முன்னதாக நவம்பர் 14ம் தேதி மொஹரம் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது.

பிறை தென்படாததால் நவம்பர் 15ம் மொஹரம் என தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.
 .

30.10.13

புதிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் - கே.சி.வீரமணி

தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

விராலி மலை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.விஜயகுமார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய அமைச்சராக அவர், நவம்பர் 1- ஆம் தேதி பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 .

10.10.13

தஇஆச மாநில செயற்குழுக் கூட்டம் - அழைப்பிதழ்


நாள் 
20.10.2013, ஞாயிறு, காலை 10.00 மணி

இடம்
புதுக்கோட்டை.

தலைமை
திரு. சு. கயத்தாறு
மாநிலத் தலைவர்

முன்னிலை
திரு. ஆ. சங்கர்
மாநில துணைத் தலைவர் 

திரு. செ. பாபு
மாநில தணிக்கையாளர் 

வரவேற்புரை
திரு. சி. செந்தில் குமார்
மாவட்டச் செயலாளர், புதுக்கோட்டை.

வேலை அறிக்கை
திரு. க. இசக்கியப்பன்
பொதுச் செயலாளர்.

வரவு – செலவு அறிக்கை
திரு. ஆ. மதலைமுத்து
மாநிலப் பொருளாளர்

இதழ் அறிக்கை
திரு. ம. எட்வின் பிரகாஷ்
மாநில துணைப் பொதுச் செயலாளர்

சங்க கூட்ட திட்ட வெளியீடு
திரு. அ. அருணகிரியார்
மாநில அமைப்புச் செயலாளர்

நன்றியுரை
திரு. ச. வெங்கடேசன்
மாநில தலைமையிடச் செயலாளர் 

பொருள்:

1. 2013-14 உறுப்பினர் சேர்க்கை.

2. நமது முழக்கம் - இதழ் சந்தா.

3. அதிகாரிகளுடன் சந்திப்பு.

4. நீதிமன்ற நடவடிக்கைகள்.

5. P.P. 750 மற்றும் சிறப்புபடி 500 தொடர்பாக.

6. வழக்கு நிதி.

7. புதிய மாவட்டக்கிளை உருவாக்குதல்.

8. இதழ் புரவலர் திட்டம் மற்றும் விளம்பரம் பெறுதல்.

9. செயற்குழு உறுப்பினர் கொணர்வன.


மாநிலப் பொறுப்பாளர்கள், மாநில துணைப் பொறுப்பாளர்கள், வருவாய் மாவட்ட செயலாளர்கள் ஆகிய அனைவரும் தவறாது கலந்து கொள்வதோடு, தங்கள் மாவட்ட கருத்துக்களையும் சங்க வளர்ச்சி குறித்த கருத்துகளையும் முன்வைக்க அன்புடன் அழைக்கிறேன்.

என்றென்றும் சங்கப் பணியில்,

க. இசக்கியப்பன்,

பொதுச் செயலாளர்.
.

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு

தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர்களுக்கான அகவிலைப்படியை 10 விழுக்காடு உயர்த்தி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:
மக்களின் குரலே மகேசனின் குரல்" என்று பேரறிஞர் அண்ணா வகுத்துக் கொடுத்த வழிமுறையும், எனது தலைமையிலான அரசு கடைபிடித்து வரும் "மக்களுக்குச் செய்யும் பணி, மகேசனுக்கு செய்கின்ற பணி" என்ற குறிக்கோளும் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடாக விளங்குகிறது. இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த மக்கள் தொண்டினை செய்யும் வாய்ப்பையும், அதற்கான வழிமுறையையும் பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களைக் காப்பதிலும், அவர்களுக்கு உரிய சலுகைகளை வழங்குவதிலும் எனது தலைமையிலான அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில், மத்திய அரசு அலுவலர்களுக்கான அகவிலைப் படியை 1.7.2013 முதல் மத்திய அரசு 10 விழுக்காடு உயர்த்தி அறிவித்ததையடுத்து, தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர்களுக்கான அகவிலைப்படியை 10 விழுக்காடு உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்பதையும், இந்த அகவிலைப்படி உயர்வு 1.7.2013 முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த அகவிலைப் படி உயர்வு, உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள், வருவாய் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி உதவியாளர்கள், எழுத்தர்கள் மற்றும் வழக்கமாக அகவிலைப்படி அளிக்கப்படும் அனைவருக்கும் பொருந்தும்.

இந்த அகவிலைப் படி உயர்வினால் சுமார் 18 லட்சம் அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் பயனடைவர். இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 2,292 கோடியே 78 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கை, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கடமைகளை மேலும் சிறப்புடன் பணியாற்ற வழிவகுக்கும்"
என்று கூறியுள்ளார்.

அகவிலைப்படி உயர்வு அரசாணை எண். 401 நாள்: 10-10-2013
.

தேர்வுநிலை / சிறப்புநிலை - 3% கூடுதல் ஊதியம் வழங்கிய உத்தரவிற்கு தெளிவுரை


தேர்வுநிலை / சிறப்புநிலை - 3% கூடுதல் ஊதியம் - தெளிவுரை

அரசுக் கடிதம் எண். 54966 / ஊதியப்பிரிவுl / 13 - 1, நாள்: 03 - 10 - 2013.
.

25.9.13

7வது ஊதியக் குழுவை அமைத்து பிரதமர் மன்மோகன்சிங் உத்தரவு

 மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. மிகவும் எதிர்பார்த்த 7-வது சம்பள கமிஷனை பிரதமர் மன்மோகன்சி்ங், அறிவித்து உத்தரவிட்டார். அத்துடன் ராணுவத்திற்கு தனியாக சம்பள கமிஷன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய நிதி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடையப்போகிறார்கள்.

6-வது சம்பள கமிஷன் அறிவிக்கப்பட்டு அதன் பரிந்துரைகள், 2006-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியன்று அமலுக்கு வந்தது. இதன் மூலம் அப்போதைய நிலவரப்படி 35 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைந்தனர். இந்நிலையில் 7-வது சம்பள கமிஷனை பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்தார்.

இது குறித்து மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "7-வது சம்பள கமிஷன் குழுவின் தலைவர், உறுப்பினர்கள் பெயர் குறித்த விவரம் விரைவி்ல் வெளியிடப்படும். இதற்கான பரிந்துரைகள் அமல்படுத்த 2 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளப்படும். 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரும். இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவர்" என்றார்.

ராணுவத்திற்கு தனியாக சம்பள கமிஷன்

இதற்கி‌டையே நாட்டின் முதல்முறையாக ராணுவத்தினருக்கு தனியாக சம்பள கமிஷனும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ராணுவ உயரதிகாரிகள், தங்களது சம்பள பிரச்னை குறித்து மத்திய அரசிடம் முறையிட்டனர். இதில் 6-வது சம்பள கமிஷனின் கோரிக்கை குறித்து வலியுறத்தினர். இந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 7-வது சம்பள கமிஷனுடன், முதன்முறையாக ராணுவத்தினருக்கான சம்பள கமிஷனும் அறிவிக்கப்பட்டுளளது.
.

24.9.13

ஓய்வூதியம் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்கல்வி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

ஓய்வூதியம் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மேல்நிலை பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சங்கத்தினர் நாகர்கோவிலில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ம. எட்வின் பிரகாஷ் வாழ்த்துரை வழங்கினார்.

தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம், தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தர ஊதியம், ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாட பிரிவு தொடங்க வேண்டும். தொழிற்கல்வியில் நவீன பாட திட்டத்தை புகுத்த வேண்டும். தொழிற்கல்வி ஆசிரியர்களை உடன் பணி வரன்முறை செய்ய வேண் டும். பணி விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும். மேல்நிலை பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர் பதவி உயர்வும், உதவி தலைமை ஆசிரியர் பதவி உயர்வும் வழங்க வேண் டும். தொழிற்கல்வி ஆசிரியர்களை பணி மாறுதல் கலந்தாய்வில் சேர்க்க வேண்டும், மேல்நிலை பள்ளி தொழிற்கல்விக்கு தனி இயக்குநரகம் உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மேல்நிலை பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சங்கத்தின் சார்பில் தென் மண்டல அளவிலான உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

சங்க மாநில துணைத் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். தூத்துக்குடி தலைவர் செல்வராஜ், விருதுநகர் தலைவர் முத்துராஜ், ராமநாதபுரம் முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க குமரி மாவட்ட தலைவர் பரமேஸ்வரன் வரவேற்றார். தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொருளாளர் வள்ளிவேலு தொடக்கி வைத்தார். சங்க மாநில கொள்கை பரப்பு செயலாளர் நாகராஜன் போராட்டத்தை விளக்கி பேசினார். மாநில பொருளா ளர் நேரு, மூட்டாவை சேர்ந்த நாகராஜன், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் ஹெர்பர்ட் ராஜா சிங், பால் செபாஸ்டின், ஞான செல்வ திரவியம், பல்வேறு ஆசிரியர் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பாலச்சந்திரன், ராபர்ட் ஜேம்ஸ், வேலவன்,  கனகராஜ், ராஜ குமார், செல்வின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தமிழ்நாடு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் ஜிம்சன் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
.

23.9.13

18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

ஆசிரியர் தகுதி தேர்வு ரத்து செய்ய முடியாது என்று உத்தரவிட்ட சென்னை ஐகோர்ட், அரசின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பளித்தது.

ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றிப்பெற்றவர்களுக்கு மட்டுமே ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்று தேசிய கல்வி கவுன்சில் கடந்த 2010ம் ஆண்டு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து தமிழகத்தில் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. அதன்படி தகுதி தேர்வு நடத்தப்பட்டு சுமார் 12 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி வழங்கப்பட்டது.

இந்நிலையில் தகுதி தேர்வு கட்டாயம் என்ற அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு 32 ஆயிரம் ஆசிரியர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்து முடிந்துவிட்டது. இதில் 14 ஆயிரம் பேருக்கு மட்டும் பணி வழங்கப்பட்டது. மீதம் உள்ள 18 ஆயிரம் பேருக்கு ஆசிரியர் பணி வழங்கப்படவில்லை. இவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை உயர் நீதிமன்றம் விசாரித்து, “சான்றிதழ் சரி பார்க்கும் பணியில் கலந்து கொண்டவர்கள் தகுதி தேர்வு எழுத தேவையில்லை. அவர்களுக்கு அரசு விலக்கு அளிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டது. ஆனால் தமிழக அரசு இதை பின்பற்றவில்லை.

இதை பின்பற்ற கோரி சுமார் 100 ஆசிரியர்கள் சார்பாக வக்கீல்கள் காசிநாதபாரதி, சுதா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அதில், சான்றிதழ் சரி பார்ப்பு பணியில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு தேவையில்லை என்று கூறி அவர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி அரிபரந்தாமன் முன் விசாரணைக்கு வந்தது. அட்வகேட் ஜெனரல் சோமயாஜி, கூடுதல் அரசு வக்கீல் சஞ்சய்காந்தி ஆஜராகி, “தற்போது காலி பணியிடங்கள் இல்லை. அனைத்து பணியிடங்களும் நிரப்பப்பட்டுவிட்டது’’ என்றனர்.

இந்த வழக்கில் நீதிபதி அரிபரந்தாமன் இன்று அளித்த தீர்ப்பு:

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் உத்தரவின்படி, ஆசிரியர்களுக்கு கட்டாயம் தகுதி தேர்வு வைக்கவேண்டும். தகுதி தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட வர்களுக்கு மட்டும்தான் ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்று கல்வி கவுன்சில் தெளிவாக கூறியுள்ளது. உயர்நீதிமன்றமும் இதை உறுதி செய்துள்ளது. தற்போது தகுதி தேர்வில் வெற்றிப்பெற்றவர்களே ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். அப்படி இருக்கும்போது மனுதாரர்களுக்கு தகுதி தேர்வில் விலக்கு அளிக்க முடியாது. எனவே, மனுவை தள்ளுபடி செய்கிறோம்.

தகுதி தேர்வு நடத்த வேண்டும் என்று அரசு பிறப்பித்துள்ள உத்தரவு சரிதான். அதை ரத்து செய்ய முடியாது. 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது. ஏற்கனவே அவர்களது சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தாலும் அவர்கள் தகுதி தேர்வு எழுத வேண்டும்.

இவ்வாறு தீர்ப்பில் கூறியுள்ளார்.

நன்றி:

 

+ 2, 10ம் வகுப்பு துணை பொதுத்தேர்வு: மாணவர் புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள்


பிளஸ் 2, 10ம் வகுப்பு துணை பொதுத்தேர்வு நடைமுறைகளில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள் வழங்கப்படுகிறது. இம்மாற்றம் தமிழகம் முழுவதும் இன்று அமலுக்கு வருகிறது.

இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் முதன்மை கண்காணிப்பாளர்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவு:

தமிழகத்தில் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு துணை பொது தேர்வு இன்று (23ம் தேதி) முதல் அக்டோபர் 5ம் தேதி வரை நடைபெற உள்ளது. 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் ஒரே கால கட்டத்தில் வெவ்வேறு தேர்வு மையங்களில் நடைபெறும்.

இந்த தேர்வுக்கு 20 வினாத்தாள் அடங்கிய முத்திரையிட்ட வினாத்தாள் கட்டுகள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு தேர்வு அறைக்கும் ஒரு வினாத்தாள் கட்டு வழங்கப்படும். வினாத்தாள் கட்டுக்களை தலைமை கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள் பிரிக்க கூடாது.

10 மற்றும் 12ம் வகுப்பு அனைத்து பாடங்களுக்கும் மாற்று எண் விடைத்தாள் வழங்கப்பட வேண்டும். மாணவர்களின் புகைப்படத்துடன் கூடிய பார் கோடிங் ஷீட் அனைத்து தேர்வர்களுக்கும் தனித்தனியே ஒவ்வொரு மாணவருக்கும் வழங்கப்படும். பார் கோடிங்ஷீட் தான் புதிய டம்மி பிளை ஷீட் ஆகும்.
பார்கோடிங் ஷீட்டின் முதல் பகுதியை மாணவர்களும், 2ம் பகுதி மற்றும் 3ம் பகுதியை விடைத்தாள் திருத்தும் மையத்தில் உதவி தேர்வர்கள் பூர்த்தி செய்வர்.

மேல்நிலை தேர்வுக்கு இரண்டு டம்மி நம்பர் மெயின் ஷீட் எடுத்து பிளை லீப் அகற்றப்படுகிறது. பின்னர் இரண்டாவது முதன்மை விடைத்தாளின் முதல்தாளை அகற்றிவிட்டு, இரண்டு முதன்மை விடைத்தாள்களும் இணைக்கப்படுகிறது. இதனையடுத்து முதல் பக்கத்தில் மாணவர் புகைப்படத்துடன் கூடிய பார் கோடிங் வைத்து, தையல் இயந்திரம் மூலம் தைக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. 10ம் வகுப்பு தேர்வில் ஒரு முதன்மை விடைத்தாளுடன் 22 பக்கங்கள் வரும் வகையில் கூடுதல் விடைத்தாள்கள் இணைத்து பார் கோடிங்ஷீட் தைக்கப்பட்டிருக்கும்.

20 மாணவர்கள் ஒரு தேர்வு அறையில் தேர்வு எழுதும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். தேர்வு அறையில் வினாத்தாள் உறையை மாணவர் இருவர் கையொப்பம் பெற்ற பின்னரே வழங்கவேண்டும்.

காலையில் 10.10க்கு விடைத்தாள்களை தேர்வர்களின் புகைப்படத்துடன் ஒப்பிட்டு பார்த்து வழங்க வேண்டும். கூடுதல் விடைத்தாள் "கே" படிவத்தில் கையொப்பம் பெற்று வழங்க வேண்டும். 10.30 வரை தேர்வுக்கு வராத மாணவர்களின் தேர்வு எண்ணை உறையின் இடது புறத்தில் சிவப்பு மையால் எழுத வேண்டும். அவர்களின் விடைத்தாளின் பார்கோடிங் தாளில் "ஏ" என்பதை சிகப்பு மையால் "டிக்" செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகள் தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

நன்றி:


சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் விலக்கு கிடைக்குமா?

கடந்த 2010ம் ஆண்டு நேர்முக தேர்வில் கலந்து கொண்ட 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுமா என்று உயர்நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பில் தெரிந்துவிடும்.

தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டும் ஆசிரியர் பணி வழங்கவேண்டும் என்று தேசிய கல்வி கவுன்சில் கடந்த 2010ம் ஆண்டு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து தமிழகத்தில் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. அதன்படி தகுதி தேர்வு நடத்தப்பட்டு சுமார் 12 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி வழங்கப்பட்டது. 

இந்த நிலையில் தகுதி தேர்வு கட்டாயம் என்ற அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு, அதாவது கடந்த 2010ம் ஆண்டு 32 ஆயிரம் ஆசிரியர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்து முடிந்து விட்டது. இதில் 14 ஆயிரம் பேருக்கு மட்டும் பணி வழங்கப்பட்டது. மீதம் உள்ள 18 ஆயிரம் பேருக்கு ஆசிரியர் பணி வழங்கப்படவில்லை. இதனால் இவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை உயர் நீதிமன்றம் விசாரித்து, சான்றிதழ் சரி பார்க்கும் பணியில் கலந்து கொண்டவர்கள் தகுதி தேர்வு எழுத தேவையில்லை. அவர்களுக்கு அரசு விலக்கு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆனால் தமிழக அரசு இதை பின்பற்றவில்லை. இதை பின்பற்ற கோரி சுமார் 100 ஆசிரியர்கள் சார்பாக வக்கீல்கள் காசிநாதபாரதி, சுதா ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், சான்றிதழ் சரி பார்ப்பு பணியில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு தேவையில்லை என்று கூறி அவர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி அரிபரந்தாமன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அட்வகேட் ஜெனரல் சோமையாஜி, கூடுதல் அரசு வக்கீல் சஞ்சய்காந்தி ஆகியோர் ஆஜராகி, தற்போது காலி பணியிடங்கள் இல்லை. அனைத்து பணியிடங்களும் நிரப்பப்பட்டுவிட்டது என்றனர்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்படுகிறது. 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் விலக்கு கிடைக்குமா என்று இன்று தெரியும்.

 நன்றி:



பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்