தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

29.6.16

ஊதிய உயர்வு திருப்தி அளிக்கவில்லை: மத்திய அரசு ஊழியர் சங்கம்

7 வது ஊதியக் குழுவின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 23.55 சதவீதம் சம்பள உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் இது தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என மத்திய அரசு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாங்கள் கேட்ட அளவிற்கு மத்திய அரசு ஊதியத்தை உயர்த்தவில்லை. விலைவாசி உயர்விற்கு ஏற்றவாறு ஊதியம் உயர்த்தப்படவில்லை. ஆரம்ப ஊதியம் ரூ.23,000 ஆக இருக்க வேண்டும் என நாங்கள் கோரிக்கை வைத்தோம். ஆனால் ரூ. 18,000 ஆக மட்டுமே மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இதனால் ஊதிய உயர்வு திருப்தி அளிக்கவில்லை. இதனால் விரைவில் போராட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்