தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

10.10.14

இந்தியருக்கு அமைதிக்கான நோபல் பரிசு: தெரசாவுக்குப்பின் ஒரு கவுரவம்

இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தான் பெண் மலாலாவுக்கு வழங்கப்படுகிறது.

2014ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அறிவிக்கப்பட்டது. இதன்படி, இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தான் பெண் மலாலா ஆகியோர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வாகியுள்ளனர். அமைதிக்கான நோபல் பரிசு பெறுவதில் அன்னை தெரசாவுக்கு பின்னர் அமைதி விருதை இந்தியர் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா மட்டுமல்லாமல், உலகளவில் குழந்தை தொழிலாளர்களே இருக்கக்கூடாது என்ற நோக்கத்துடன் அதனை ஒழிக்க பாடுபட்டு வரும் கைலாஷ் சத்யார்த்தி, 2014ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வாகியுள்ளார். இதன் மூலம் நோபல் பரிசு பெறும் 8வது இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அன்னை தெரசாவுக்குப்பின், அமைதிக்கான நோபல் பரிசு பெறும் இந்தியர் கைலாஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் மத்திய பிரதேசத்தின் விதிஷாவில் 1954 ஜன., 11ம் தேதி பிறந்தார். 1990ல் "பச்பன் பச்சாவோ ஆந்தோலன்' என்ற அமைப்பை நிறுவிய இவர், நாட்டில் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க பாடுபட்டு வருகிறார். இதன் மூலம் இந்தியாவில் 80 ஆயிரம் குழந்தை தொழிலாளர்களை மீட்டு, கல்வி கற்க உதவியுள்ளார்.

இவர் இந்தியா மட்டுமல்லாமல் உலகளவில் பல்வேறு நாடுகளில் குழந்தைகள் சந்திக்கும் மனித உரிமை மீறல்கள் பிரச்னைகள் பற்றி நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். குழந்தை தொழிலாளர் ஒழிப்பு நடவடிக்கை தவிர, வறுமை, வேலைவாய்ப்பின்மை, எழுத்தறிவின்மை, மக்கள் தொகை பெருக்கம் போன்ற சமூக பிரச்னைக்களுக்கு குரல் கொடுத்து வருகிறார். யுனஸ்கோ அமைப்பில் உறுப்பினராகவும் இருக்கிறார். இதன் மூலம் அனைத்து குழந்தைகளுக்கு கல்வி வழங்க வேண்டும் என வலியுறுத்து வருகிறார். தற்போது இவர் டில்லியில் வசித்து வருகிறார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்