தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

13.10.14

முறையற்ற ஆசிரியர் பணியிட நிர்ணய விவகாரம்: குமரியில் இன்று முதல் தொடர் உண்ணாவிரதம்

குமரி மாவட்ட ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு அமைப்பாளர் ஜெரோம், இணை அமைப்பாளர் வேலவன், நிர்வாகிகள் ஜாண்இக்னேஷியஸ், மரியமிக்கேல், ஹெர்பர்ட், ராஜாசிங், பரமேஸ்வரன், இருதயதாசன், சேவியர், ஜாண் பெனடி ஆகியோர் கூறியதாவது:

குமரி மாவட்ட கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள 2014&15 கல்வியாண்டிற்கான பணியாளர் நிர்ணயம் கடந்த பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வந்த அனைத்து நடைமுறைகளையும், மரபுகளையும் கணக்கில் கொள்ளாமல் வெளிவந்துள்ளது. இது பொது பள்ளிகளை இழுத்து மூடும் மறைமுக திட்டம் என்றே தோன்றுகிறது.

கல்வித்துறை அலுவலர்கள் உரிய காலத்தில் செய்ய வேண்டிய பணியிட நிர்ணய வேலையில் வருவாய்துறை அதிகாரிகள் அத்துமீறி நுழைந்துள்ள நிலை உருவானது ஏன்?. இது குறித்து தமிழக அரசு விரிவான விசாரணை நடத்த வேண்டும்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1010 பணியிடங்கள் உபரி என அறிவிப்பு வெளியிட்டுள்ள செயலை ஆசிரியர் இயக்க கூட்டமைப்பு கண்டிக்கிறது.

தலைமை ஆசிரியர் பணியிடம் பள்ளியை நிர் வகிக்க ஏற்படுத்தப்பட பணியிடம். இப்பணி யிடத்தை ஒரு ஆசிரியர் பணியிடமாக கருதக்கூடாது. உதவி தலைமை ஆசிரியர்களுக்கு 14 பாட வேளைகள் ஒதுக்கப்பட்ட சூழல் மாறி முழு பாடவேளை ஒதுக்கப்பட்டுள்ளது. இதனாலும் ஆசிரியர்கள் உபரியாக்கப்பட்டுள்ளனர்.

வேறு எந்த மாவட்டத்திலும் நடை பெறாத அவலங்கள் குமரி மாவட்ட கல்வித்துறையில் அரங்கேறி வருகிறது. இனியும் இதனை பொறுத்துக் கொள்ள இயலாது.

இதுகுறித்து கடந்த 10ம் தேதி இடை நிலைக்கல்வி இணை இயக்குநரை சந்தித்து முறையிட்டுள்ளோம். கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ச்சியாக 13ம் தேதி (இன்று) முதல் 24ம் தேதி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தொடர் உண்ணாவிரத போராட்டமும், 24ம் தேதி முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டமும் நடைபெறும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்