தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

5.2.14

வேலூரில் நடைபெற்ற மாநில செயற்குழு முடிவுகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் 02.02.2014, ஞாயிறு காலை 11.00 மணிக்கு வேலூர், ஆசிரியர் இல்லத்தில் மாநிலத் தலைவர் சு. கயத்தாறு தலைமையில் நடைபெற்றது.

வேலூர் மாவட்டச் செயலாளர் பெ. இளங்கோ அனைவரையும் வரவேற்றார். மாநில துணைத் தலைவர்கள் நவநீத சுந்தர், க.மு. பாக்கியராஜ் மற்றும் மாநிலச் செயலாளர் அ. ஜெயராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் க. இசக்கியப்பன் வேலை அறிக்கையை சமர்பித்து உரையாற்றினார். மாநிலப் பொருளாளர் ஆ. மதலைமுத்து புதுக்கோட்டை செயற்குழுவிற்கு பிறகு உள்ள வரவு-செலவு அறிக்கையை வாசித்தார். இடைநிலை ஆசிரியர் குரல் இதழ் ஆசிரியரும் மாநில துணைப் பொதுச் செயலாளருமான ம. எட்வின் பிரகாஷ் இதழ் வரவு-செலவு பற்றி கூறினார்.

பொருள் மீது விவாதத்தில், கன்னியாகுமரி ஹெர்பர்ட் ராஜா சிங், திருநெல்வேலி சரவணன், மாநில இணைச் செயலாளர் விருதுநகர் அப்பாத்துரை, நீலகிரி சிவராமன், சென்னை கமலகண்ணன், வேலூர் பால்ராஜ், திருவண்ணாமலை வெங்கட்ராமன், திருச்சி தியாகராஜன் ஆகியோர் பங்கேற்று பேசினர். வேலூர் மாவட்ட பொருளாளர் குணசேகரன் நன்றி கூறினார்.

தீர்மானங்கள்:

1. பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் தமிழ்நாட்டில் அரசு / நகராட்சி / மாநகராட்சி/அரசு உதவி பெறும் உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளில் 6,7,8 வகுப்புகளில் பணியாற்றும் 25,000 இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்திட நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2. மத்திய அரசுப்பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஊதிய விகிதத்தை Pay Band 1இல் இருந்து (5200 + 2800 - 20200) Pay Band 2க்கு மாற்றி (9300 + 4200 - 34800) அமைத்திட மாண்புமிகு தமிழக முதல்வரை வலியுறுத்தி தீhமானம் நிறைவேற்றப்பட்டது.

3. 2013-14ம் கல்வியாண்டில் பதவி உயர்வு பட்டியலில் உள்ள இடைநிலை ஆசிரியர் அனைவருக்கும் அவர்களது பணியிடத்தினை அரசாணை எண் 100, பள்ளிக்கல்வித்துறை, நாள் 27.06.2003ன் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடமாக தரம் உயர்த்தி அப்பள்ளியிலேயே பதவி உயர்வு வழங்கிட நடவடிக்கை எடுத்திட மதிப்புமிகு பள்ளிக்கல்வி செயலாளரை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

4. தமிழக முதல்வரின் தேர்தல் வாக்குறுதியை அமல்படுத்தும் விதமாக தன் பங்கேற்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்திட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

5. அரசாணை எண் 216ஐ அனைவருக்கும் பொருந்துமாறு உயர், மேல்நிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் அனைவரும் பயன்பெறும் வகையில் பொது ஆணையாக வெளியிட மதிப்புமிகு பள்ளிக்கல்வி செயலாளரை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

6. M.Com., B.Ed., M.A.(Eco), B.Ed., முடித்த இடைநிலை ஆசிரியர்களுக்கு நேரடி பதவி உயர்வாக முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கிட நடவடிக்கை எடுத்திட பள்ளிக்கல்வித்துறையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

7. சிறுபான்மை இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கிட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

8. தேர்வு பணிகளில் இடைநிலை ஆசிரியர்களை பயன்படுத்திடுவதை தவிர்த்திடுமாறு மதிப்புமிகு தேர்வு துறை இயக்குனரை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

9. உபரி ஆசிரியர் பணியிட மாறுதலில் முடிவுறு பணித் தொகுதியாகி வரும் உயர், மேல்நிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு விலக்கு தந்திட பள்ளிக்கல்வி செயலரை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

10. வரும் காலங்களில் ஆசிரியர் நியமனங்களை ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் முடித்து, மாணவர் நலன் காத்திட அரசு நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

11. மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 25ம் தேதி மாநிலம் தழுவிய மாலை நேர ஆர்ப்பாட்டம் நடத்திட முடிவு செய்யப்பட்டது.

12. கோரிக்கையை அரசு நிறைவேற்ற தவறும் பட்சத்தில் உட்படுத்துதல், முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு, அரசாணை 216ஐ அமல்படுத்திட வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில அமைப்பின் சார்பில் மார்ச் தொடக்கத்தில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டது.
.

1 கருத்து:

  1. 10 +D.T.Ed +Degree+B.Ed is eligible for middle school headmaster promotion? But Chennai highcourt gave a judgement that is 10+ D.T.Ed is equal to +2 . But educational dept did not give promotion? please pass this message to our chief minister ,education minister, educational seceratary,directors, judge , lawers, and all press people.

    பதிலளிநீக்கு

பிரபலமான இடுகைகள்