தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

21.2.14

உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி இடைநிலை / சிறப்பாசிரியர் பணியிலிருந்து பட்டதாரி ஆசிரியர் - பதவி உயர்வு கலந்தாய்வு

 இடைநிலை ஆசிரியர்கள் / சிறப்பாசிரியர்கள் தரத்திலிருந்து பட்டதாரி ஆசிரியர் (அனைத்து பாடங்கள்) பதவி உயர்வு கலந்தாய்வு 22.02.2014 அன்று காலை 10.00 மணியளவில் அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெறும். முன்னுரிமைப்பட்டியல் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

முன்னுரிமைப் பெயர்ப்பட்டியலில் இடம்பெற்றுள்ள ஆசிரியர்கள் எவரேனும் பதவி உயர்வினை (நிரந்தரமாக / தற்காலிகமாக) துறப்பு செய்வதாக இருந்தால் கலந்தாய்வு அன்றே பதவி உயர்வு உரிமைவிடல் விருப்பக் கடிதத்தினை வழங்க வேண்டும்
.
பதவி உயர்வு ஆணை பெற்றவர்கள் அடுத்த வேலை நாளில் கண்டிப்பாக பணியில் சேரவேண்டும்.

பதவி உயர்வு வழங்கப்படும் எண்ணிக்கை:

தமிழ் - 179

ஆங்கிலம் -  82

கணிதம் -  87

அறிவியல் - 65

சமூக அறிவியல் - 85

மொத்தம் - 498

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்