தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

8.1.10

பொங்கல் பரிசு - அரசு உத்தரவு

பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 272 கோடி ரூபாய் அளவிற்கு பொங்கல் போனஸ் வழங்கப்படும்' என்று, தமிழக அரசு அறிவித்துள்ளது.இது குறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு: "சி' மற்றும் "டி' பிரிவு அலுவலர்களுக்கு சென்ற ஆண்டை விட 500 ரூபாய் உயர்த்தி 3,000 ரூபாய் உச்ச வரம்பிற்கு உட்பட்டு போனஸ் வழங்கவும், "ஏ' மற்றும் "பி' பிரிவு அலுவலர்கள் அனைவருக்கும் சிறப்பு போனசாக 1,000 ரூபாய் வழங்கவும், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு பொங்கல் பரிசாக 500 ரூபாய் வழங்கவும், முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

தொகுப்பூதிய பணியாளர்கள், சத்துணவு திட்டப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், ஊராட்சி உதவியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக பணியாளர்கள், தினக்கூலியாக பணியாற்றி பணி நிரந்தரம் செய்யப் பட்ட பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோருக்கு, சிறப்பு மிகை ஊதியமாக 1,000 ரூபாய் வழங்கப்படும். உள்ளாட்சி நிறுவனங்கள், அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்களுக்கும் போனஸ் வழங்கப்படும். இதனால், அரசுக்கு 272 கோடி ரூபாய் செலவாகும். இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அரசாணை எண்: 01 நாள்: 02-01-2010
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்