தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

8.1.10

இடைநிலை ஆசிரியர் பிஎட் படிக்க விடுப்பு

இடைநிலை ஆசிரியர்கள் பிஎட் பட்ட படிப்பை நேரடியாக கல்லூரிகளில் சேர்ந்து படிக்க அனுமதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

தொடக்க பள்ளி இடைநிலை ஆசிரியர்கள், கல்லூரி, பல்கலைக்கழகத்தில் நேரடியாக பிஎட் படிக்க ஊதியம் இல்லாத விடுப்பு அனுமதிக்க வேண்டும். பிஎட் படிப்பில் சேர்ந்த நாள் முதல் இறுதி தேர்வு எழுதிய நாள் வரை ஊதியம் இல்லா விடுப்பு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டிருந்தனர்.

இதை பரிசீலித்த அரசு, அந்த கோரிக்கையில் சில திருத்தங்களை செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி 5 ஆண்டுகள் இடைநிலை ஆசிரியர் பணி முடித்தவர்கள் மட்டுமே பிஎட் படிப்பில் சேரலாம். அவர்களுக்கு ஓராண்டுக்கு மிகாமல் தகுதியுள்ள விடுப்பு (மருத்துவ விடுப்பு மற்றும் படிப்பதற்கான விடுப்பு நீங்கலாக) அனுமதிக்க வேண்டும். அப்படி அனுமதி வழங்கப்படும் ஆசிரியருக்கு பிஎட் படிப்பு முடியும் வரை ஊதியம் இல்லா விடுப்பு அனுமதிக்கப்படுகிறது. அதனால் எக்காரணத்தை கொண்டும் இடையில் அந்த ஆசிரியர் மீண்டும் பணியில் சேர அனுமதி கிடையாது. இறுதி தேர்வுக்கு மறுநாள் பணியில் சேர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

நன்றி: நக்கீரன்.IN,சனிக்கிழமை, 29, ஆகஸ்ட் 2009
.

1 கருத்து:


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்