- முகப்பு
- தலைப்புகள்
- மாநில பொறுப்பாளர்கள்
- மாவட்ட நிர்வாகிகள்
- இயக்க நடவடிக்கைகள்
- மாநில மாநாடு - 2007
- 'நமது முழக்கம்' மின்னிதழ்
- பள்ளி நாள்காட்டி 2016 - 17
- படிவங்கள்
- தமிழ்நாடு கல்வி விதிகள்
- துறைத் தேர்வுகள்
- அரசாணைகள்
- எளிமையாக்கப்பட்ட முப்பருவக் கல்வி மதிப்பீட்டுப் படிவங்கள்
- இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI)
- தமிழ்நாடு அரசு பாடப்புத்தகங்கள்
- வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் - 2014
11.12.19
10.12.19
தென்காசி மாவட்டத்தில் தஇஆச புதிய கிளை தொடக்கம்.
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க தென்காசி மாவட்டப் பொதுக்குழு மற்றும் தேர்தல் 08/12/ 2019, ஞாயிற்றுக்கிழமை அன்று அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்றது.
தேர்தல் ஆணையராக மதுரை மாவட்டத் தலைவர் ராஜரத்தினம் செயலாற்றினார். தேர்தல் பார்வையாளராக மாநிலப் பொதுச்செயலாளர் அ. சங்கர் கலந்து கொண்டார்.
கீழ்கண்ட மாவட்டப் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்ட தலைவராக செல்வசுந்தரராஜ், மாவட்டச் செயலாளராக கணேசன், மாவட்ட பொருளாளராக மதியழகன், அமைப்புச் செயலாளராக சுதாகர், தலைமையிடச் செயலாளராக நந்தகுமார், துணைத்தலைவர்களாக மனோகர் ராஜதுரை, பழனியம்மாள், இணைச்செயலாளர்களாக ஜாண்சன் ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
முன்னதாக மாவட்டச் செயலாளர் கணேசன் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் மதியழகன் நன்றி கூறினார்.
9.12.19
தஇஆச தூத்துக்குடி மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்தல் முடிவுகள்
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க தூத்துக்குடி மாவட்டப் பொதுக்குழு மற்றும் தேர்தல் 07/12/ 2019, சனிக்கிழமை அன்று தூத்துக்குடி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அரங்கத்தில் வைத்து நடைபெற்றது.
தேர்தல் ஆணையராக தஇஆச மதுரை மாவட்ட தலைவர் ராஜரத்தினம் செயலாற்றினார். தேர்தல் பார்வையாளராக மாநில துணை பொதுச்செயலாளர் ம. எட்வின் பிரகாஷ் மற்றும் மாநில செயலாளர் ரெ. ஹெர்பர்ட் ராஜா சிங் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
பொதுச்செயலாளர் அ. சங்கர் அவர்கள் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் எதிர்கால திட்டம் பற்றியும் கோரிக்கைகள் பற்றியும் அதை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம் என்பதையும் விளக்கி சிறப்புரை நிகழ்த்தினார்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் பவுல் ஆபிரகாம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முருகன், தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் சேகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
கீழ்கண்ட மாவட்டப் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்ட தலைவராக ஞானதுரை, மாவட்டச் செயலாளராக செல்வின் ஜூலியஸ், மாவட்ட பொருளாளராக சரவணகுமார் மாவட்ட மகளிரணி அமைப்பாளராக உமாமகேஸ்வரி, அமைப்புச் செயலாளராக மணிமேகலை, தலைமையிடச் செயலாளராக சகிலா சலாமத், துணைத்தலைவர்களாக யோனா செல்வின், பிரேமா, இணைச்செயலாளர்களாக வசிகர் ஜெயக்குமார், அகிலா ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
பொதுக்குழு கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது .
1. அரசு /அரசு உதவி பெறும் நகராட்சி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களையும் பட்டதாரி ஆசிரியராக 2006 முதல் உட்படுத்த வேண்டும்.
2. நான்கு ஆண்டு காலமாக அரசு, உயர், மேல்நிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியருக்கு பதவி உயர்வு வழங்காமல் உள்ளது. உடனே இந்த ஆண்டு பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும்.
3. 5 மற்றும் 8ஆம் வகுப்பிற்கான அரசு பொதுத் தேர்வு முறையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.
4. 10, 11 ,12 ஆகிய அரசு பொதுத் தேர்வுகளில் மாணவர்களின் நலன் கருதி உயர், மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் தேர்வுப்பணியில் இருந்து முற்றிலுமாக விலக்களிக்க வேண்டும்.
முன்னதாக மாவட்டச் செயலாளர் செல்வின் ஜுலியஸ் அனைவரையும் வரவேற்றார். மாவட்டத் தலைவர் ஞானதுரை ஏற்புரை நிகழ்த்தினார். மாவட்ட பொருளாளர் சரவண குமார் நன்றி கூறினார்.
24.8.19
இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின்(STFI) தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்ட முடிவுகள்
இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம், இன்று (24.08.2019) சென்னை, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அலுவலகத்தில் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு, (தமிழ்நாடு) மாநில அமைப்பாளர் திரு.ச.மயில் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் எண் 1:
தே.க.கொ வரைவையே நடைமுறைப்படுத்தி வரும் தமிழக அரசிற்குக் கண்டனம்
தேசியக் கல்விக்கொள்கை – 2019 வரைவு அறிக்கை மீது 15.08.2019 வரை கருத்துக் கேட்பு நடத்தியுள்ள மத்திய அரசு இதுவரை ஏற்பு செய்யப்பட்ட இறுதி அறிக்கையை வெளியிடாத நிலையில், தமிழக அரசு தேசியக்கல்விக்கொள்கை – 2019 வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ள பொதுக்கல்வியை பாதிக்கக்கூடிய, கிராமப்புற ஏழை, எளிய குழந்தைகளின் இலவச தமிழ்வழிக் கல்வியைப் பாதிக்கக்கூடிய வகையிலான தொடர் நடவடிக்கைகளை முன்கூட்டியே மேற்கொண்டு வருவதை இம்மாநிலக்குழு வன்மையாகக் கண்டிப்பதோடு, அதன் தொடர்ச்சியாக தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளை கல்வி நிலையிலும், நிர்வாக நிலையிலும் பாதிக்கக்கூடிய அரசாணை (நிலை) எண் : 145(பள்ளிக்கல்வித்(தொக)3(2)துறை) நாள் : 20.08.2019 -ஜ உடனடியாகத் திரும்பப்பெற இம்மாநிலக்குழு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் எண் 2:
கருத்தரங்குகள் நடத்திய மாவட்ட அமைப்புகளுக்கு வாழ்த்துகள்
இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் 21.07.2019 தமிழ்நாடு மாநிலக்குழுவின் முடிவின்படி தேசியக் கல்விக்கொள்கை – 2019 வரைவு அறிக்கை தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கருத்தரங்குகள் நடத்திய இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட அமைப்புகளுக்கு இம்மாநிலக்குழு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவுத்துக் கொள்கிறது.
தீர்மானம் எண் 3:
STFI & AIFUCTO மதுரையில் மாநில மாநாடு
தேசியக்கல்விக்கொள்கை – 2019 தொடர்பாக AIFUCTO(All India Federation of University & College teachers organisations) அமைப்புடன் இணைந்து STFI & AIFUCTO சார்பில் செப்டம்பர் - 2019-ல் மதுரையில் மாநில அளவிலான மாநாடு ஒன்றை மிகச்சிறப்பாக நடத்திட இம்மாநிலக்குழு ஏகமனதாகத் தீர்மானிக்கிறது.
தீர்மானம் எண் 4:
பெண்ணாசிரியர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிக் கட்டணம்
இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் 01.10.2019 மற்றும் 02.10.2019 ஆகிய இரு நாட்கள் திண்டுக்கல்லில் நடைபெறும் பெண்ணாசிரியர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி வகுப்பில் பங்கேற்பவர்களிடம் பிரதிநிதிக் கட்டணமாக தலா ரூ500-(ரூபாய் ஐநூறு மட்டும்) பெறுவது என இம்மாநிலக்குழு ஏகமனதாகத் தீர்மானிக்கிறது.
தீர்மானம் எண் 5:
ஜாக்டோ-ஜியோ போராளிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளைத் திரும்பப்பெற பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் தொடர்ச்சியாக, தமிழக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையாக கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாகத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் உறுப்புச் சங்கமான தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் திரு.மா.இரவிச்சந்திரன் அவர்களின் தற்காலிகப் பணிநீக்கத்தை உடனடியாக ரத்துசெய்யக் கோரியும், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான அனைத்து பழிவாங்கும் ஒழுங்கு நடவடிக்கைகளையும் ரத்து செய்திடக்கோரியும் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் 09.09.2019 அன்று மாலை அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்கள் முன்பும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்திட இம்மாநிலக்குழு ஏகமனதாகத் தீர்மானிக்கிறது.
கூட்டத்தில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் மாநிலத் தலைவர் செ.அப்பாத்துரை, பொதுச்செயலாளர் மற்றும் STFI அகில இந்திய மத்திய குழு உறுப்பினர் அ. சங்கர், மாநிலப் பொருளாளர் க.சு.பிரகாசம், மாநில தனிக்கையாளர் திருமதி அ. ஜெயராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநிலப் பொதுக்குழு முடிவுகள்
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் மாநில பொதுக்குழு கூட்டம் 23/ 8 /2019, வெள்ளிக்கிழமை அரசூழியர் சங்க அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநில தலைவர் திரு. செ. அப்பாதுரை தலைமை தாங்கினார்.
திண்டுக்கல் மாவட்ட செயலாளர் திருமதி ஞானம்மாள் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
வேலை அறிக்கையை பொதுச்செயலாளர் சங்கர் சமர்ப்பித்தார்.
இதழ் அறிக்கையினை துணை பொதுச் செயலாளர் எட்வின் பிரகாஷ் அவர்கள் சமர்ப்பித்தார்.
வரவு செலவு கணக்குகளை மாநில பொருளாளர் திரு.க.சு.பிரகாஷ் அவர்கள் சமர்ப்பித்து ஒப்புதல் பெற்றார்.
கூட்டத்திற்கு தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செய்தி தொடர்பாளர் முருகேசன் மற்றும் மாவட்டச் செயலாளர் செல்மா அவர்களும் அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முபாரக் அவர்களும் மேனாள் பொதுச்செயலாளர் இயக்கத்தின் நிறுவனருமான தோழர் ஆ.சுப்பிரமணியன் அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள்.
அமைப்புச் செயலாளர் வெங்கட்ராமன் அவர்கள் நன்றி உரையாற்றினார்.
பொதுக் குழு கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
1. அரசு / அரசு உதவி பெறும் நகராட்சி, மாநகராட்சி, உயர், மேல்நிலைப் பள்ளி யில் பணியாற்றும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் பட்டதாரி ஆசிரியராக உட்படுத்த வேண்டும்.
2. இரண்டு ஆண்டு காலமாக நிறுத்தி வைக்கப்பட்ட பதவி உயர்வு கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும்
3 . அரசு உயர்நிலைப்பள்ளி பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க முன்னுரிமை பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும்.
4. தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை 2019 ல் உள்ள ஆசிரியர்கள், மாணவர்கள், ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி கற்பதில் உள்ள சிக்கல் நிறைந்த இந்த தேசிய கல்விக் கொள்கையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
5. மாணவர்கள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு மூடப்பட்ட 46 ஆரம்பப் பள்ளிகளை நூலகமாக மாற்றியதை தமிழக அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் மீண்டும் பள்ளிகளை திறக்க உத்தரவிட வேண்டும்.
6. அரசாணை 145இல் உள்ள பள்ளி இணைப்பு என்ற முறையை கைவிட வேண்டும் .
7. கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற செப்டம்பர் மாதம் 1ஆம் தேதியில் இருந்து 9ஆம் தேதி வரை பள்ளிக்கல்வி செயலாளர், பள்ளிக்கல்வி இயக்குனர், பள்ளிக் கல்வி இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி/ இடைநிலைக்கல்வி) பள்ளிக்கல்வி அமைச்சர், முதல்வர் ஆகியோருக்கு மின்னஞ்சல் அனுப்புவது. வருகிற செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதி ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது.
என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

21.8.19
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுக்குழுக் கூட்ட அழைப்பிதழ்

நாள்: 23/08/2019, வெள்ளிக்கிழமை.
இடம்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகம், திண்டுக்கல் (போலீஸ் ஜிம் அருகில், மெங்கிள்ஸ் ரோடு)
தலைமை: திரு. C. அப்பாத்துரை, மாநிலத் தலைவர்
முன்னிலை: திரு. S. வெங்கடேசன், தலைமையிடச் செயலாளர்.
வரவேற்புரை: திருமதி ஞானம்மாள் மாவட்டச் செயலாளர் திண்டுக்கல்.
வேலை அறிக்கை: திரு. அ. சங்கர், பொதுச்செயலாளர்.
வரவு செலவு அறிக்கை: திரு. க. சு .பிரகாசம், மாநில பொருளாளர்.
இதழ் அறிக்கை: திரு. ம. எட்வின் பிரகாஷ், துணைப் பொதுச்செயலாளர்.
நன்றியுரை: திரு. வெங்கட்ராமன், அமைப்புச் செயலாளர்.
அனைத்து மாவட்டப் பொறுப்பாளர்கள், மாநிலப் பொறுப்பாளர்கள், இணை /துணை பொறுப்பாளர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவண்
அ.சங்கர்,
பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்.

மேல்நிலைப்பள்ளிகளுடன் ஆரம்பப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகள் இணைப்பு - அரசாணை
பள்ளிக்கல்வி ஒரே வளாகத்தில் செயல்படும் அரசு/ மாநகராட்சி/நகராட்சி/ஊராசி ஒன்றிய தொடக்க/நடுநிலைப்பள்ளிகளின் மாணக்கர்களின் நலன் மற்றும் நிர்வாக மேம்பாடு கருதி இப்பள்ளிகளின் கல்வி செயல்பாடுகளை ஆய்வு செய்யும் அதிகாரத்தை அதே வளாகத்தில் செயல்படும் அரசு/ உயர்நிலை/மேல்நிலை பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு வழங்குதல் சார்பாக ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசாணை
அரசாணை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பிரபலமான இடுகைகள்
-
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சிறப்பு காலமுறை ஊதியம் பெறுவோருக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி ப...
-
பிற்பட்ட வகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, சீர்மரபினர் இனத்தை சேர்ந்த மாணவர்களுக்கு இணையதளம் மூலம் இந்தாண்டு உதவி தொகை வழங்கப்படும...
-
ஏற்கனவே அறிவித்தபடி, பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா காலணி மற்றும் புத்தகப் பைகளை வழங்க, ரூ.491 கோடியை ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு...
-
1. அறிவியல் மையங்கள், கண்காட்சி ஆகியவை அகச் சிந்தனையை வளர்க்கும் சில வழிகள் என்று கூறியவர் - கூவர். 2. மாணவனின் சிந்தனை வினாவிற்கான விடைகள...
-
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம், கன்னியாகுமரி மாவட்டக் கிளையின் வலைத்தளம் இது. சங்கத்தின் செயல்பாடுகள் இங்கே வெளியிடப்படும்.
-
பொது மாறுதல் கலந்தாய்வுக்கு(கவுன்சிலிங்) விண்ணப் பங்கள் பெறுவது நிறுத்தப்பட்டுள்ளதால் ஆசிரிய, ஆசிரியைகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ...
-
பேரன்புமிக்க பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம். தமிழ்நாட்டிற்கும், தமிழ்ச் சமூகத்திற்கும், தமிழுக்கும் தன்னிகரற்ற த...