தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

21.4.18

கரூரில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்.

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் கரூரில் இன்று நடைபெற்றது.

மாநிலத்தலைவர் ஆ.மதலைமுத்து தலைமையில் நடைபெற்றது. கரூர் மாவட்ட செயலாளர் ஆரோக்கிய பிரேம்குமார் அனைவரையும் வரவேற்றார். இந்த கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சார்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்தகூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் அ.சங்கர் சிறப்புரையாற்றினார்.
காவிரி மேலாண்மை வாரியத்தினை மே 3 ம் தேதிக்குள் மத்திய அரசு அமைத்திட வலியுறுத்தி இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன். நீட்  தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலகு அளித்திடவும்., தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிடவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தினை தமிழகத்திலிருந்து அப்புறப்படுத்தி தீர்மானங்கள் வலியுறுத்தப்பட்டது.

மேலும், அரசு, அரசு உதவி பெறும், நகராட்சி, மாநகராட்சி, உயர், மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களையும் பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்த அவர், எட்டாவது ஊதியக்குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட முரண்பாடுகளை நீக்கிடவும், 21 மாத நிலுவைத் தொகையை வழங்கிடவும், CPS ரத்து செய்திடவும் அனைத்து வகை ஊழியர்களையும் நிரந்தரப்படுத்திடவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்