பிளஸ் 2 தேர்வு பணியில் இருந்து விலக்கு கேட்டு சிவகங்கை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆறு முதல் எட்டாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு தேர்வு பணி வழங்குவதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. இதையடுத்து தங்களுக்கு பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென, ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தனர். அறை கண்காணிப்பாளர் பணியில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டுமென, தேர்வுத்துறை இணை இயக்குனர் உத்தரவிட்டார்.
சிவகங்கை மாவட்டத்தில் 6 முதல் 8 ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு தேர்வு பணி வழங்கி நேற்றுமுன்தினம் இரவு உத்தரவிடப்பட்டது.
இதை கண்டித்து நேற்று தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில பொதுச் செயலாளர் சங்கர் தலைமையில் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டத் தலைவர் நரசிம்மன், செயலாளர் தவமணிச்செல்வம், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் துணைத் தலைவர் ரோஸ், மாவட்டப் பொருளாளர் குமரேசன், உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலாளர் இளங்கோ பங்கேற்றனர்.
இரண்டு மணி நேரம் தொடர்ந்து போராட்டம் நடந்தது. அவர்களிடம் மாவட்டக் கல்வி அலுவலர் (பொறுப்பு) சகிதா, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சண்முகநாதன் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில் பெண் ஆசிரியர்களுக்கு முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டது. ஆண் ஆசிரியர்களில் விரும்புவோர் தேர்வு பணியில் பங்கேற்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். போராட்டத்தை ஆசிரியர்கள் கைவிட்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக