தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

24.3.15

ஏப்ரல் 19இல் உண்ணாவிரதப் போராட்டம் - 'ஜாக்டோ' முடிவு

ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏப்ரல், 19ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த, 'ஜாக்டோ' முடிவு செய்துள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின், 28 சங்கங்கள் இணைந்து, ஜாக்டோ ஆசிரியர் கூட்டுக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழு சார்பில், கடந்த, 8ஆம் தேதி பேரணி நடந்தது. ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு சட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து, ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் உள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ சார்பில் தொடர் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜாக்டோவின் உயர்மட்டக் குழுக் கூட்டம், தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத் தலைவர் சுரேஷ் தலைமையில் சென்னையில் நடந்தது. முடிவில் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மார்ச் 30ஆம் தேதி ஜாக்டோ மீண்டும் கூடவுள்ளது.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்