தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

30.6.10

மக்கள் தொகை கணக்கெடுக்க...சிக்கல்! கலெக்டரிடம் ஆசிரியர்கள் புகார்

"மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், வகுப்பு செயல்படும் நேரத்தில் செல்லக்கூடாது என திருப்பூர் மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. எனவே, கணக்கெடுப்பு பணியில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும்' என, ஆசிரியர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.திருப்பூர் பகுதியில் உள்ள பள்ளிகளில் சமீபத்தில் ஆய்வு செய்த தொடக்க கல்வி அலுவலர், பணி நேரத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்குச் சென்ற ஆசிரியர்களுக்கு "ஆன் டியூட்டி' அனுமதிக் காமல், "சிறு விடுப்பு' என பதிவு செய்து, நட வடிக்கை எடுத்தார். அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், இதுகுறித்து மாநகராட்சி கமிஷனரிடம் புகார் தெரிவித்தனர். அவர், முதன்மை கல்வி அலுவலருக்கு விளக்க கடிதம் அனுப்பியதுடன், கலெக்டருக்கும் அறிக்கை சமர்ப்பித்தார்.

நன்றி:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்