- முகப்பு
- தலைப்புகள்
- மாநில பொறுப்பாளர்கள்
- மாவட்ட நிர்வாகிகள்
- இயக்க நடவடிக்கைகள்
- மாநில மாநாடு - 2007
- 'நமது முழக்கம்' மின்னிதழ்
- பள்ளி நாள்காட்டி 2016 - 17
- படிவங்கள்
- தமிழ்நாடு கல்வி விதிகள்
- துறைத் தேர்வுகள்
- அரசாணைகள்
- எளிமையாக்கப்பட்ட முப்பருவக் கல்வி மதிப்பீட்டுப் படிவங்கள்
- இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI)
- தமிழ்நாடு அரசு பாடப்புத்தகங்கள்
- வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் - 2014
16.10.11
12.10.11
அக்.,17, 19 ல் அரசு விடுமுறை - அரசாணை
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளதால், முதல் கட்ட
ஓட்டுப்பதிவு நடக்கும் பகுதிகளில், வரும் 17ம் தேதியும் (திங்கள்),
இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கும் பகுதிகளில் வரும் 19ம் தேதியும்
(புதன்) அரசு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
இதன்படி, அந்த தினங்களில் அரசு
அலுவலகங்கள், அரசு சார்ந்த தொழிற்சாலைகள், அரசு கட்டுப்பாட்டில் உள்ள
அமைப்புகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களும்
மூடப்பட்டிருக்கும்.
7.10.11
3.10.11
7% அகவிலைப்படி அரசாணை எண்: 273 நாள்: 03 - 10 - 2011
ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
.
அதிகாலையில் "மாதிரி ஓட்டுப்பதிவு"
உள்ளாட்சி தேர்தலில், ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு துவங்குகிறது. ஓட்டுப்
பதிவிற்கு முன் நடத்தப்படும் "மாதிரி ஓட்டுப்பதிவை' எத்தனை மணிக்கு
நடத்துவது என்ற குழப்பம் ஏற்பட்டது.
தேர்தல் கமிஷன், மாதிரி ஓட்டுப்பதிவை,
ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பாக நடத்த வேண்டும் என கூறியுள்ளது. இதனால்,
அதிகாலை 5.30 மணிக்கு மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தப்பட உள்ளது.
மாதிரி
ஓட்டுப்பதிவு நடத்திக் காட்ட குறைந்தது ஒரு மணி நேரம் ஆகும். அதிகாலை 5.30
மணிக்கு அலுவலர்கள் பணியை துவக்கினால் தான், ஓட்டுப்பதிவை சரியான நேரத்தில்
துவக்க முடியும்.
நன்றி:
தேர்தல் அலுவலர்களுக்கு கமிஷன் புதிய உத்தரவு
நகராட்சி, பேரூராட்சிகளில் முதன் முறையாக, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம்
பயன்படுத்தப்பட உள்ளது. இதனால் தேர்தல் அலுவலர்களுக்கு, கமிஷன் புதிய
அறிவுரைகளை வழங்கியுள்ளது.
- தலைவர், கவுன்சிலருக்கு என இரண்டு ஒட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதால், அவற்றை இரண்டு அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்.
- கமிஷன் அறிவித்துள்ள ஆவணங்கள் அடிப்படையில் வாக்காளர்களை அனுமதிக்க வேண்டும்.
- ஒரு ஓட்டுக்கு மேல் பட்டனை அழுத்திவிடாமல் இருக்க கவனமுடன் கண்காணிக்க வேண்டும்.
- இயந்திரத்தில் பழுது ஏற்பட்டால் பறக்கும் படைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
- முன்னோட்ட ஓட்டுப்பதிவை செய்து காட்ட வேண்டும்.
- ஓட்டுச்சாவடி அலுவலர்கள் முதல் நாளே, ஓட்டுச்சாவடியில் வந்து தங்க வேண்டும்
நன்றி:
2.10.11
அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 7 சதவீதம் உயர்கிறது; விரைவில் அரசாணை வெளியாகிறது
மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு விலைவாசி உயர்வுக் கேற்ப
அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்வு
வழங்கப்படும். ஜனவரி 1-ந்தேதியை மையமாகவும் ஜூலை 1-ந்தேதியை மையமாகவும்
வைத்து அக விலைப்படி கொடுக்கப்படுகிறது.
கடந்த
மாதம் 15-ந்தேதி மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி
உயர்த்தப்பட்டது. ஏற்கனவே பெற்று வந்த 51 சதவீத அகவிலைப்படியுடன் தற்போது
உயர்த்தப்பட்ட 7 சதவீதமும் சேர்த்து 58 சதவீத அகவிலைப்படியை மத்திய அரசு
ஊழியர்கள் பெறுகிறார்கள்.
மத்திய அரசு
ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டவுடன் தமிழக அரசு ஊழியர்கள்
தங்களுக்கு எப்போது உயரும் என்று எதிர்பார்த்து இருந்தனர். அவர்களுக்கு
மகிழ்ச்சி ஏற்படுத்தும் வகையில் முதல் - அமைச்சர் ஜெயலலிதா அகவிலைப்படியை
உடனே உயர்த்தி கொடுக்க முடிவு செய்தார்.
நிதித்துறை
செயலாளர் சண்முகத்துடன் ஆலோசனை நடத்தி மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு
வழங்குவதற்கான கோப்பில் கையெழுத்துட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனால்
அதற்கான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஓரிரு நாட்களில் அகவிலைப்படி
உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
மத்திய
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கியதும் மாநில அரசு
ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி கொடுக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா
அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டார். தற்போது இடைத் தேர்தல், உள்ளாட்சி
தேர்தல் நடைபெறுவதால் மத்திய- மாநில தேர்தல் ஆணையத்திடம் அகவிலைப்படி
உயர்வு வழங்க தமிழக அரசு முறைப்படி அனுமதி பெற்றுள்ளது.
அகவிலைப்படி
உயர்த்தியதற்கான அரசாணையை மத்திய அரசு இன்னும் வெளியிடாததால் தமிழக அரசு
அகவிலைப்படி உயர்வை அறிவிக்காமல் நிறுத்தி வைத்துள்ளது. மத்திய அரசின்
அரசாணையை எதிர் பார்த்து தமிழக அரசு இருப்பதே இந்த தாமதத்திற்கு காரணம்
என்று கூறப்படுகிறது. எனவே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சி
அடையக்கூடிய அகவிலைப்படி உயர்வு விரைவில் வருகிறது. அதற்கான அனைத்து அரசு
நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு தயாராக இருக்கின்றன.
அறிவிக்கப்பட
உள்ள புதிய அகவிலைப்படி 7 சதவீதத்துடன் சேர்த்து மொத்தம் 58 சதவீத அக
விலைப்படியை இனி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பெறுவார்கள். தட்டு ஊதியம்
மற்றும் தர ஊதியத்தில் 7 சதவீத அக விலைப்படி நிர்ணயிக்கப்படுகிறது. இதன்
மூலம் குறைந்த பட்சம் ரூ. 600 முதல் அதிக பட்சமாக ரூ. 5000 வரை சம்பள
உயர்வு கிடைக்கும். 13 லட்சத்து 50 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களும் 5
லட்சத்து 50 ஆயிரம் ஓய்வூதியதாரர்களும் மற்றும் 3 லட்சம் அரசு
நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களும் பயன் அடைவார்கள்.
நன்றி:
1.10.11
அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்வு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பிரபலமான இடுகைகள்
-
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சிறப்பு காலமுறை ஊதியம் பெறுவோருக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி ப...
-
பிற்பட்ட வகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, சீர்மரபினர் இனத்தை சேர்ந்த மாணவர்களுக்கு இணையதளம் மூலம் இந்தாண்டு உதவி தொகை வழங்கப்படும...
-
ஏற்கனவே அறிவித்தபடி, பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா காலணி மற்றும் புத்தகப் பைகளை வழங்க, ரூ.491 கோடியை ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு...
-
1. அறிவியல் மையங்கள், கண்காட்சி ஆகியவை அகச் சிந்தனையை வளர்க்கும் சில வழிகள் என்று கூறியவர் - கூவர். 2. மாணவனின் சிந்தனை வினாவிற்கான விடைகள...
-
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம், கன்னியாகுமரி மாவட்டக் கிளையின் வலைத்தளம் இது. சங்கத்தின் செயல்பாடுகள் இங்கே வெளியிடப்படும்.
-
பொது மாறுதல் கலந்தாய்வுக்கு(கவுன்சிலிங்) விண்ணப் பங்கள் பெறுவது நிறுத்தப்பட்டுள்ளதால் ஆசிரிய, ஆசிரியைகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ...
-
பேரன்புமிக்க பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம். தமிழ்நாட்டிற்கும், தமிழ்ச் சமூகத்திற்கும், தமிழுக்கும் தன்னிகரற்ற த...