ஆசிரியர் பொது இடமாறுதல் கவுன்சிலிங்கிற்கு, விண்ணப்பங்கள் பெறுவதை நிறுத்தி வைக்க அரசு உத்தரவிட்டுள்ளதால், இவ்வாண்டில் கவுன்சிலிங் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அரசு தொடக்கப்பள்ளிகள், நடுநிலை,உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கவுன்சிலிங் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. 2012-13ம் ஆண்டிற்கான பணியிட மாறுதல் கவுன்சிலிங்கிற்கு, ஏப்ரல் 25 முதல் 28க்குள் ஆசிரியர்கள் விண்ணப்பிக்குமாறு பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறை அறிவித்தது.
பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் விண்ணப்பங்களை பெற்று அனுப்புமாறு கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் ஏப்., 27ல் விண்ணப்பங்கள் பெறுவதை நிறுத்துமாறு அனுப்பப்பட்ட உத்தரவயைடுத்து, விண்ணப்பங்கள் பெறுவது நிறுத்தி வைக்கப்பட்டது. பெறப்பட்ட விண்ணப்பங்களும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் இவ்வாண்டில்,ஆசிரியர் பொது இடமாறுதல் கவுன்சிலிங் நடப்பது கேள்விக்குறியாகி உள்ளது.
நன்றி:

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக