தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

12.5.12

தமிழக ஆசிரியர் தகுதித் தேர்வில், புதுச்சேரி மாநிலத்தவரும் பங்கேற்கலாம்

தமிழக அரசு நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வில் புதுச்சேரி மாநில டி.டி.எட்., பி.எட்., ஆசிரியர்கள் பங்கு பெறலாம் என புதுச்சேரி மாநில கல்வி அமைச்சர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநில கல்வி அமைச்சர் தியாகராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:
தேசிய ஆசிரியர் கல்வி நிறுவனம், 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர்கள் அந்தந்த மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என விதியை வகுத்துள்ளது.

இதன்படி, புதுச்சேரி அரசு, தமிழக அரசால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வை புதுச்சேரி அரசுப்பணிக்கு தகுதியானதாக அங்கீகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த ஆசிரியர் பட்டயப் பயிற்சி (டி.டி.எட்) மற்றும் இளங்கல்வி (பி.எட்.,) பட்டம் பெற்றவர்களையும் இத்தேர்வுக்கு அனுமதிக்கும்படி தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இக்கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்தவர்களும் ஜூன் 3ம் தேதி நடக்கவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்துகொள்ள அனுமதி அளித்துள்ளது. மேலும் இத்தேர்வுக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்களும் தற்போது விண்ணப்பிக்கலாம் எனவும் தமிழக அரசு சிறப்பு அனுமதி அளித்துள்ளது.

எனவே இத்தேர்வுக்கு இதுவரை விண்ணப்பிக்காத புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் உரிய விண்ணப்பப் படிவங்களை வரும் 14ம் தேதி முதல் கீழ்கண்ட அலுவலகங்களில் 50 ரூபாய் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 18ம் தேதி மாலை 5 மணிக்குள் அதே அலுவலகங்களில் சமர்பிக்க வேண்டும். அதற்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பமாட்டாது.

புதுச்சேரி, அண்ணா நகர் பெருந்தலைவர் காமராஜர் நூற்றாண்டு கல்வி வளாகம், 4 வது தளம், பி பிளாக், புதுச்சேரி கல்வி வாரியத்திலும், காரைக்காலில் முதன்மை கல்வி அலுவலர் அலுவலத்திலும் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் கடலூர் அல்லது விழுப்புரம் தேர்வு மையத்திலும், காரைக்கால் பகுதியைச் சேர்ந்தவர்கள் நாகப்பட்டினம் அல்லது மயிலாடுதுறை தேர்வு மையத்திலும் தேர்வு எழுதலாம். ஆசிரியர் பட்டயப்பயிற்சி (டி.டி.எட்) மற்றும் இளங்கல்வி பட்டம் (பி.எட்.,) இறுதியாண்டு பயில்வோரும் இத்தேர்வினை எழுதலாம். இவ்வாறு அமைச்சர் தியாகராஜன் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர் பணியிடங்களில் சேரும் ஆசிரியர்களுக்கு, இத்தகுதித் தேர்வு அவசியமாகும். மத்திய அரசின் அடிப்படை கல்வி சட்டத்தின்படி ஆசிரியர் தகுதி தேர்வு பெற்றவர்களே ஆசிரியர்களாக பணியாற்ற முடியும். புதுச்சேரியில் இப்பயிற்சி தேர்வு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படுகிறது.

2010ம் ஆண்டுக்குப் பின்னர் ஆசிரியர் கல்வியில் பட்டயம் மற்றும் பட்டம் பெற்றவர்கள் இந்தத் தேர்வை அவசியம் எழுத வேண்டும். இத்தேர்வை ஆசிரியர் கல்வி பயின்ற ஒருவர் 5 முறைகள் மட்டுமே எழுத முடியும். அதன் பின் அவர் இத்தேர்வை எழுத முடியாது. தமிழகத்திற்கு இணையாக புதுச்சேரியிலும் காலதாமதமின்றி புத்தகங்கள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புதுச்சேரியில் இந்த கல்வி ஆண்டிற்குள் ஆசியர்களின் வருகைப்பதிவேடு ஆன்லைனில் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் காலதாமதமாக பள்ளி வருவது தடுக்கப்படும்.

புதுச்சேரியில் கல்வி வாரியம் அமைப்பதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன. அவை களையப்பட்டு விரைவில் கல்வி வாரியம் அமைக்கப்படும். ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக தமிழகத்தை அணுகியபோது, புதுச்சேரி அரசின் கோரிக்கைகளை ஏற்று, புதுச்சேரி, காரைக்காலைச் சேர்ந்தவர்கள் தேர்வு எழுத அனுமதி வழங்கியதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார். கல்வித் துறை இயக்குனர் வல்லவன் உடனிருந்தார்.

நன்றி:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்