ஆசிரியர், அரசு ஊழியருக்கு தமிழக அரசு புதிய காப்பீடு திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு காப்பீடு திட்டத்தை ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் செயல்படுத்தி வந்தது. இதில் மாதம் பிரிமியமாக ரூ.25 ம், இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.2 லட்சம் வரை வழங்கப்பட்டு வந்தது.
தற்போது அரசு அறிமுகப்படுத்தியுள்ள திட்டத்தில் மாத பிரிமியமாக ரூ.75 வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் காப்பீடு தொகையை ரூ. 4 லட்சமாக உயர்த்தி அரசு அறிவித்துள்ளது. இரண்டு ஆண்டுகாலம் என்பதை நான்கு ஆண்டுகளாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், எட்டு லட்சம் பேரும், பொதுத்துறை நிறுவனங்களான அரசு போக்குவரத்து துறை, மின் வாரியம் உட்பட அனைத்து நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களும் பயன் பெறுவர்.
எந்தெந்த நோய்கள் காப்பீடு திட்டத்தில் வரும், எந்த ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று கொள்ளலாம் என்பது குறித்த விபரங்களை அரசு விரைவில் வெளியிடவுள்ளது.
.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக