தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

28.6.16

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு?

நாடு முழுவதும் உள்ள, ஒரு கோடிக்கும் மேற்பட்ட, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கும், ஏழாவது ஊதியக் கமிஷன் அறிக்கை, விரைவில் அமலுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

ஊதியக் கமிஷன் அறிக்கை மீதான தங்களுடைய பரிந்துரையை, அரசு செயலர்கள் குழு, மத்திய அரசிடம் அளித்துள்ளது. இம்மாத இறுதியில் நடக்கும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டு, அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து, மத்திய நிதித் துறை செயலர் அசோக் லாவசா கூறியதாவது: மத்திய அமைச்சரவை செயலர் பி.கே.சின்கா தலைமையிலான, மத்திய அரசு செயலர்கள் குழு, தன் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இம்மாத இறுதியில் நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில், இதுகுறித்து விவாதிக்கப்பட்டு, அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

யாருக்கு, எவ்வளவு?

* மத்திய அரசு ஊழியர்களுக்கு, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பளம் திருத்தி அமைக்கப்படுகிறது.

* நீதிபதி ஏ.கே.மாதுார் தலைமையிலான, ஏழாவது ஊதியக் கமிஷன், தன் அறிக்கையை, கடந்த ஆண்டு இறுதியில் தாக்கல் செய்தது.

* இந்தாண்டு ஜன., 1ம் தேதி முதல், முன் தேதியிட்டு, இது நடைமுறைக்கு வரும்.

* நாடு முழுவதும், 50 லட்சம் ஊழியர்களும், 58 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் பெறுவர்.

* சம்பள கமிஷன், 23.5 சதவீத உயர்வுக்கு பரிந்துரை செய்துள்ளது.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்