தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

22.6.11

பள்ளிகளின் செயல்பாடுகள் யூனியன் வாரியாக கண்காணிப்பு

பள்ளிகள் நடத்தும் களப்பயிற்சி, செய்முறை பாடங்களை கல்வித்துறை அதிகாரிகள் யூனியன் வாரியாக கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பள்ளிகள் நடத்த வேண்டிய பாடத்திட்டம் எதுவென முடிவாகாத நிலையில், தாமதமாக திறந்தன. திறந்த பின்னும் புத்தகங்கள் இல்லாத நிலையில் ஒருங்கிணைப்பு படிப்பாக நடத்தப்படுகின்றன. மாணவர்களுக்கு பாடம் சார்ந்த செயல் முறை படிப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. களப்பயிற்சி அளிக்கவும் உத்தரவிட்டுள்ளனர். 

இதையடுத்து பள்ளிகளில் சுற்றுப்புறச் சூழல், மண்வளம், பருவ காலங்கள் போன்றவற்றை விளக்க அருகில் உள்ள விவசாய விரிவாக்க மையங்களை தொடர்பு கொள்ளும்படி உத்தரவிட்டுள்ளனர். வங்கிகளுக்குச் சென்று செலான்களை பூர்த்தி செய்வது எப்படி, போஸ்ட் ஆபீசில் கடிதங்கள் அனுப்புவது எப்படி என்பதை செயல்முறையாக நடத்த கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் "சைல்டு சென்டர்' தன்னார்வ நிறுவனம் மூலம் பொதுச் சுகாதாரம் குறித்து வகுப்பில் பாடம் நடத்தும்படி கூறினர். போக்குவரத்து போலீசார், அதிகாரிகளைக் கொண்டு சாலை விதிகள் குறித்து பாடம் நடத்தும்படி கேட்டுக் கொண்டுள்ளனர். இதையடுத்து பள்ளிகளை கல்வித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். முதன்மை கல்வி அலுவலர் ரஜனிரத்னமாலா திருமங்கலம், மதுரை மேற்கு யூனியனில் உள்ள பள்ளிகளையும், மதுரை கல்வி அலுவலர் சுவாமிநாதன் அலங்காநல்லூர், திருப்பரங்குன்றம், வாடிப்பட்டி யூனியனிலும், மேலூர் கல்வி அலுவலர் விஜயன் மதுரை கிழக்கு, மேலூர், கொட்டாம்பட்டி யூனியன்களையும், உசிலம்பட்டி கல்வி அலுவலர் முரளிதரன் உசிலம்பட்டி, சேடப்பட்டி யூனியன்களிலும், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் கள்ளிக்குடி, டி.கல்லுப்பட்டி யூனியன்களிலும் கண்காணிக்கின்றனர். முதன்மை கல்வி அலுவலர் கூறுகையில், ""செயல்முறை படிப்புகளால் மாணவர்கள் நன்கு புரிந்து கொள்கின்றனர். எளிதாக நடைமுறைகளை தெரிந்து கொள்கின்றனர்.

நன்றி



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்