தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

29.6.11

குழந்தைகளுக்கு இலவச கட்டாய கல்வி: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

"குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி குறித்த விதிமுறைகளை ஆறு வாரங்களில் இறுதி செய்து தமிழக அரசு வெளியிட வேண்டும்" என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த வக்கீல் எஸ்.சத்தியசந்திரன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, "முதல் பெஞ்ச்" பிறப்பித்த உத்தரவு: 
குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி பெறும் உரிமை, 2009ம் ஆண்டே அமலுக்கு வந்துவிட்ட பின்னும், இதுவரை தமிழக அரசு அதற்கான விதிமுறைகளை வகுக்கவில்லை என்பது தான் மனுதாரரின் குறை. கடந்த டிசம்பரிலேயே நகல் வரைவு விதிகள் தயாராகி விட்டதாகவும், அதை அரசு இறுதி செய்யவில்லை என்றும் மனுதாரர் தெரிவித்தார். வரைவு விதிகள் விரைவில் இறுதி செய்யப்படும் என, அரசு பிளீடர் தெரிவித்துள்ளார். எனவே, ஆறு வாரங்களுக்குள் விதிகளை இறுதி செய்து அரசு வெளியிட வேண்டும். இவ்வாறு, "முதல் பெஞ்ச்" உத்தரவிட்டுள்ளது. 

ஐகோர்ட்டில் வக்கீல் சத்தியசந்திரன் தாக்கல் செய்த மனு: குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமை பெறும் சட்டத்தின்படி, ஆறு முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவச கட்டாயக் கல்வி அளிக்கப்பட வேண்டும். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டம் அமலுக்கு வந்துவிட்டது. சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகளை மத்திய அரசு வகுத்து, கெஜட்டில் வெளியிட்டுவிட்டது. ஆந்திரா, கோவா, பஞ்சாப், அரியானா ஆகிய மாநிலங்களும் விதிகளை வகுத்து வெளியிட்டுவிட்டன. கடந்த டிசம்பரில் தமிழக அரசு, நகல் வரைவு விதிகளை வகுத்தது; பல்வேறு தரப்பினரின் கருத்துக்களையும் கோரியது. விதிகளை இறுதி செய்து அவற்றை வெளியிட்டிருக்க வேண்டும். இந்த கல்வியாண்டிலாவது அதை அமல்படுத்தியிருக்க வேண்டும். சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம், குழந்தை தொழிலாளர் முறை ஒழிக்கப்படும். சட்டப்படி, விதிமுறைகளை வகுத்து வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

நன்றி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்