" சீருடை இல்லாமல் மாணவர்களை விளையாட அனுமதிக்க கூடாது ,''என, உடற்கல்வி இயக்குனரம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழக உடற்கல்வி இயக்குனரகம் சார்பில் மண்டல உடற்கல்வி ஆய்வாளர்கள் கூட்டம் சென்னையில் நடந்தது. இதில், "மாணவர்களுக்காக மண்டலம், மாவட்டம், மாநில அளவில் நடக்கும் விளையாட்டு போட்டிகள், அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் விளையாட்டு போட்டிகளில், சீருடை இல்லாமல் பங்கேற்க அனுமதிக்க கூடாது,'' என, உடற்கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது. கிராம மாணவர்கள் சார்ட்ஸ், பனியன் இல்லாமல் கூட விளையாடுகின்றனர். இனி வரும் காலங்களில் சீருடை இல்லாமல் போட்டிகளில் அனுமதிக்க கூடாது. இதை மண்டல உடற்கல்வி இயக்குனர்கள் கடுமையாக பின்பற்ற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக