இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு அளிக்க கூடுதல் முன்னுரிமை பட்டியல் தயாரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில அமைப்பு செயலாளர் இசக்கியப்பன் தெரிவித்ததாவது:
தமிழகத்தில் ஆண்டு தோறும் இடைநிலை ஆசிரியர்கள் சீனியாரிட்டி, கல்வித் தகுதி அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுகின்றனர். இதற்காக ஜனவரி மாதம் 1ம் தேதியை கணக்கில் கொண்டு ஆண்டு தோறும் முன்னுரிமை பட்டியல் தயாரிக்கப்படுவது வழக்கம். இதில் ஏற்கனவே பதவி உயர்வு பட்டியலில் இடம் பெற்று தற்காலிக பதவி உயர்வு பெற்றவர்கள் மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் முன்னுரிமை பட்டியலில் அவர்களது பெயர்களும் இடம் பெறும். ஆனால் இந்த ஆண்டு 2008-09ம் கல்வி ஆண்டில் தற்காலிக பதவி உயர்வு பெற்றவர்களின் பெயர்களை இணைக்கவில்லை.
எனவே, 2008-09ம் கல்வி ஆண்டில் பதவி உயர்வு பெற்றவர்களின் பெயர்களோடு பி.எட் தேர்வு எழுதி முடிவு வெளியாகியுள்ள ஆசிரியர்களின் பெயர்களையும் இணைத்து ஒருங்கிணைந்த பட்டியல் தயார் செய்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங் நடத்த வேண்டும். ஏற்கனவே இதுபோல் முன்னுரிமை பட்டியல் தயாரிக்கப்பட்டு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தொடக்க கல்வித் துறையில் இதுபோல் ஆண்டு தோறும் நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு மாநில அமைப்பு செயலாளர் தெரிவித்தார்.
நன்றி:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக