தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

18.6.11

பள்ளிக் கல்வி இயக்குனராக வசுந்தரா தேவி நியமனம்

பள்ளிக் கல்வி இயக்குனர் பதவியை கூடுதல் பொறுப்பாக வகித்து வந்த தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி, பள்ளிக் கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். தேர்வுத்துறை இயக்குனர் பதவி, கூடுதல் பொறுப்பாக கொடுக்கப்பட்டுள் ளது. 

பள்ளிக் கல்வி இயக்குனர் பதவியில் இருந்த பெருமாள்சாமி, முந்தைய ஆட்சியில் டி.என்.பி.எஸ்.சி.,யில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அதையடுத்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவியிடம், பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் பதவி, கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. இர ண்டு மாதங்களுக்கும் மேலாக, இரு பொறுப்புகளையும் வகித்து வந்த வசுந்தரா தேவி, சமச்சீர் கல்விக்கான நிபுணர் குழுவில், பள்ளிக் கல்வி இயக்குனர் என்ற முறையில், உறுப்பினர் - செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கூடுதல் பொறுப்பு வகிக்கும் நிலையில், ஒரு அதிகாரி, நிபுணர் குழுவில் இடம் பெறக் கூடாது என கூறப்படுகிறது. இதையடுத்து, பள்ளிக் கல்வித்துறையின் இயக்குனராக வசுந்தரா தேவி நியமிக்கப்பட்டு, தேர்வுத்துறை இய க்குனர் பணியிடம் கூடுதல் பொறுப்பாக மாற்றி வழங்கப்பட்டுள்ளது. குழுவின் பணி முடிந்த பிறகு, வசுந்தரா தேவி மாற்றம் செய்யப்பட மாட்டார் என்றும், பள்ளிக் கல்வி இயக்குனர் பதவியில் தொடர்வார் என்றும், கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்