தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

12.6.11

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஒரு கிராம பஞ்., வார்டில் பல கவுன்சிலர் முறை நீக்கப்பட்டு ஒரு கவுன்சிலர் முறை அமல்படுத்தப்படுகிறது. 

தமிழகத்தில் வரும் அக்டோபர் மாதத்துடன் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதனையடுத்து இத்தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மாநில தேர்தல் ஆணையத்தின் மூலம் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக சென்னையில் அனைத்து மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதனையடுத்து முதற்கட்டமாக கிராம பஞ்.,வாரியாக கிராம பஞ்., அலுவலர்கள் மற்றும் பி.டி.ஓக்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. 1.1.2011 தேதியை தகுதியை கொண்டு ஏற்கனவே தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது. இதனால் கடந்த உள்ளாட்சி தேர்தலை விட இத்தேர்தலில் அதிக வாக்காளர்கள் ஓட்டு போடுகின்றனர். மேலும் கிராம உள்ளாட்சி அமைப்புகளில் வார்டுகளை எவ்வாறு பிரிப்பது, எந்த வார்டுகளில் வாக்காளர்களை சேர்ப்பது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 

தமிழகத்தில் இதுவரை கிராம பஞ்.,களில் ஒரு வார்டில் 2 மற்றும் 3 பஞ்., கவுன்சிலர்கள் பதவி முறை இருந்தது. ஆனால் வரும் தேர்தலில் இந்த பதவி முறை ஒழிக்கப்பட்டு ஒரு வார்டில் ஒரு கவுன்சிலர் மட்டுமே தேர்வு செய்யப்படுகின்றனர். மேலும், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களையும் நேரடி தேர்தல் மூலம் வாக்காளர்கள் தேர்வு செய்ய பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. முதற்கட்ட ஆலோசனையை தொடர்ந்து இரண்டாவது கட்டமாக பஞ்.,யூனியன் பி.டி.ஓக்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது. இதனை தொடர்ந்து மாநில உள்ளாட்சி தேர்தல் ஆணையர் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். 

தமிழகத்தில் வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. 
 
நெல்லை மாவட்டம்: நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை 425 கிராம பஞ்., அலுவலர்கள், துணை பி.டி.ஓக்களுடன் உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நேற்று மதியம் நடத்தப்பட்டது. மாவட்டத்தில் கிராம பஞ்., வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரித்தல், மொத்த வாக்காளர்கள் விபரம், வார்டுகள் விபரம், புதியதாக சேர்க்கப்படும் வாக்காளர்கள், அருகில் உள்ள மாவட்டங்களில் சேர்க்கப்படும் கிராம பஞ்.,கள் என்பது உட்பட பல்வேறு கருத்துக்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. 

சட்டசபை தேர்தலை அடுத்து உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமான முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆலோசனை கூட்டம் குறித்து பத்திரிக்கைளுக்கு தகவல் ஏதும் தெரிவிக்காமல் "ரகசிய'மாக நடத்தப்பட்டதின் "ரகசியம்' சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கே வெளிச்சம். சில கிராம பஞ்.,அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இன்றும் (12ம் தேதி) ஆலோசனை நடத்தப்படுகிறது. நாளை (13ம் தேதி) பி.டி.ஓக்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலெக்டர் நடராஜன் ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து வரும் 14ம் தேதி உள்ளாட்சி தேர்தல் ஆணையர், மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் நெல்லையில் ஆலோசனை நடத்துகிறார்.

நன்றி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்