தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

9.6.11

சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும், கல்வித்துறையில் அதிரடி மாற்றங்கள்

"சட்டசபை கூட்டத்தொடர் முடிஞ்சதும்,கல்வித்துறையில அதிரடி மாற்றங்கள் நடக்கப்போறது ஓய்...'' என, கடைசி தகவலுக்குள் நுழைந்தார் குப்பண்ணா.


"என்ன பண்ண போறாங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.

"முக்கியமான பள்ளிக் கல்வித்துறைக்கு தனி இயக்குனரை இன்னும் நியமிக்காம இருக்கா ஓய்... லேப்-டாப், சமச்சீர் கல்வி விவகாரம்னு, பல விஷயங்களை இந்த துறை தான் கவனிக்க வேண்டியிருக்கு... இந்த துறையை, தேர்வுத்துறை இயக்குனர்கிட்ட கூடுதல் பொறுப்பா ஒப்படைச்சு பல மாசங்கள் ஆறது.
 

"அந்த இயக்குனருக்கு, தேர்வுத்துறையை கவனிக்கவே நேரமில்லையாம்... அதனால, சட்டசபை கூட்டத்தொடர் முடிஞ்சதும், அதிரடி மாற்றங்கள் இருக்கும்னு சொல்றா ஓய்...'' எனக் கூறிவிட்டு, குப்பண்ணா நடையைக்கட்ட, மற்ற பெரியவர்களும் கிளம்பினர்.

நன்றி:


டீ கடை பெஞ்சு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்