தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

17.5.12

சீருடை இனி "மெரூன்" கலர் மாணவர்களுக்கு ஜூனில் இலவச நோட்டுகள்

பள்ளி மாணவ மாணவியருக்கு 106 கோடி நோட்டுகள் ஜூன் மாதம் பள்ளிகள் திறந்ததும் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

அரசு மற்றும் அரசு நிதி உதவி பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் தொடர் மதிப்பீட்டு முறை நடைமுறைக்கு வருகிறது. அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு இரண்டு நாள் பயிற்சியை ஆய்வு செய்வதற்காக பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி, செயலாளர் சபீதா ஆகியோர் டிபிஐ வளாகத்தில் உள்ள சிமெட் பயிற்சி மையத்து வந்தனர்.

ஆய்வுக்கு பிறகு அமைச்சர் சிவபதி கூறியதாவது:
வரும் 22ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 31ம் தேதி கடைசி நாள் என்பதால் அந்த தேதிக்கு முன்னதாகவே பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல்கள், மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இலவச பாடப்புத்தகம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஜூன் 1ம் தேதி முப்பருவ முறை புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 1 மதல் 8ம வகுப்பு வரையிலான புத்தகங்கள் அனைத்தும் நாளை முதல்(7ம் தேதி) அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பும் பணி தொடங்க உள்ளது.

இலவச பாடப்புத்தகங்கள் வழங்கும்போதே எழுதும் நோட்டுகளும், எழுது பொருட்களும், புத்தகப் பையும் வழங்கப்படும் என்று ஏற்கெனவே முதல் வர் அறிவித்து இருந்தார். அதன்படி 106 கோடி நோட்டுகள் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.

1 முதல் 8ம் வகுப்பு வரை முப்பருவ முறை என்பதால் அந்த பருவத்துக்குரிய நோட்டுகள் வழங்கப்படும். மற்ற இரண்டு பருவங்களுக்கும் தவணை முறையில் வழங்கப்படும். மற்ற வகுப்புகளுக்கு ஒரு ஆண்டு முழுமைக்கும் தேவையான நோட்டுகள் வழங்கப்படும்.

இதில் கிராப், அறிவியல் செய்முறை ஏடுகள், கணக்கு நோட்டு, கட்டுரை நோட்டு உள்ளிட்டவை அடங்கும்.


பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் வேலை வாய்ப்பு பதிவை விட்டுவிடாமல் பதிவு செய்ய வசதியாக ஆன்லைன் முறையில் பதிவு செய்ய ஏற்பாடு செய்துள்ளோம். இதற்காக தனியாக ஒரு மென்பொருளை உருவாக்கியுள்ளோம். இந்த ஆன்லைன் வசதி பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான 15 நாள் வரை பயன்பாட்டுக்கு வசதியாக திறந்திருக்கும்.

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு இலவச சீருடைகள் "மெரூன்" கலரில் (கருஞ்சிவப்பு நிறம்) இருக்கும். 1 முதல் 5ம் வகுப்பு வ ரை உள்ள மாணவியருக்கு மெரூன் கட்டம் போட்ட சட்டை, பிளைன் மெரூன் கலரில் ஸ்கர்ட் வழங்கப்படும்.

6ம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவியருக்கு மெரூன் கலரில் சுடிதார் இருக்கும். மேல் சட்டை சிறு கட்டம் போட்டதாகவும், சுடிதார் பேன்ட் பிளைன் மெரூன் கலரில் இருக்கும். மேல் துப்பட்டா இளம் பச்சை நிறத்தில் இருக்கும். மாணவர்களுக்கு பேன்ட் பிளைன் மெரூன், மேல் சட்டை சிறு கட்டம் போட்ட மெரூன் கலரில் இருக்கும்.

இவ்வாறு பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி தெரிவித்தார்.

 நன்றி:


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்