தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

19.5.12

STFI மாநாடு - நிறைவு நாள் நிகழ்வுகள்

மாநாட்டு நிறைவு நாளான 19.05.2012 அன்று முற்பகல் 10.00 மணிக்கு 3ஆம் நாள் மாநாடு தொடங்கியது.

அகில இந்திய தலைவர் கே.கார்த்திக்மண்டல் தலைமையில் தொடங்கிய 3ஆம் நாள் மாநாட்டில் “தேசிய கல்வி கருத்தரங்கம்” நடைபெற்றது. “அனைவருக்கும் தரமான கல்வி – பிரச்சனைகளும், தீர்வுகளும்” எனும் தலைப்பில் நடைபெற்ற தேசிய கல்வி கருத்தரங்கில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரெங்கராஜன் (தமிழ்நாடு), நாடாளுமன்ற உறுப்பினர் பி.கே.பிஜு(கேரளா), சட்டமன்ற மேலவை உறுப்பினர் வி.பாலசுப்பிரமணியம் (ஆந்திரம்), நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்னின் “பிரதீச்சி டிரஸ்ட்” தலைமை நிர்வாக இயக்குநர் குமார்ராணா(மேற்கு வங்காளம்) ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.

 தேசியக் கல்விக்கருத்தரங்கின் கருத்துரைகள் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரிடம் சமர்பிக்கப்பட்டு அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்கப் பெற்றிட அரசியல் உறுதியுடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு மத்திய, மாநில அரசுகளை இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு தொடர்ச்சியாக வலியுறுத்துவது என இம்மாநாட்டில் முடிவாற்றப்பட்டது.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்