பள்ளிக் கல்வித் துறையில், ராமேஸ்வர முருகன் உட்பட மூன்று இணை இயக்குனர், இயக்குனர்களாக நேற்று பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
பள்ளிக் கல்வித் துறை - இடைநிலைக் கல்வி, இணை இயக்குனராக இருந்த ராமேஸ்வர முருகன், துவக்கக் கல்வி இயக்குனராகவும், பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குனர் - தொழிற்கல்வி, மோகன்ராஜ், முறைசாரா கல்வி இயக்குனராகவும், நூலகத் துறை இணை இயக்குனர் பிச்சை, பாடநூல் கழக செயலராகவும் - இயக்குனர் நிலை, பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
மேலும், துவக்கக் கல்வி இயக்குனர் சங்கர், ஆசிரியர் தகுதித் தேர்வு இயக்குனராகவும், நூலகத் துறை இயக்குனர் அன்பழகன், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலராகவும் - இயக்குனர் நிலை, பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நூலகத் துறை இயக்குனராக அன்பழகன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், "நூலகத் துறை இயக்குனர் பதவியில் நியமிப்பதற்கு உரிய தகுதி அன்பழகனுக்கு இல்லை. எனவே அவரது நியமனம் செல்லாது' என, கடந்த மாதம், ஐகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நூலகத் துறை இயக்குனராக, தகுதி வாய்ந்தவர் விரைவில் நியமிக்கப்படுவார் என தெரிகிறது.
"ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக, தனி நிர்வாக அமைப்பு ஏற்படுத்தப்படும்' என, தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. அதன்படி, தற்போது சங்கர் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நன்றி:

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக