தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

11.5.12

TET வினா விடை - அறிவியல் - பொது 11

* ஆன்டிஜென்கள் இல்லாத இரத்தத் தொகுதி - O இரத்தத் தொகுதி

* எரிசக்தி ஆற்றலைத் தயாரிக்க உதவும் தாவரங்கள் - ஜட்ரோபா மற்றும் யூபோர்பியா

* முட்டைத் தாவரம் என அழைக்கப்படுவது - கத்தரி

* பூச்சிகளில் காணப்படும் முட்டை வகை - சென்ட்ரோலெசித்தல்

* முதலாம் ஊன் உண்ணிகளுக்கு உதாரணம் - பாம்பு

* இரண்டாம் ஊன் உண்ணிகளுக்கு உதாரணம் - கழுகு

* பறவை முட்டையின் கரு உணவில் காணப்படும் முக்கிய புரதங்கள் - பாஸ்விடின், லிப்போ விட்டலின்

* மனித கருப்பையின் உள் அடுக்குச் சுவரின் பெயர் - எண்டோமெட்ரியம்

* கரு உணவு முட்டையின் மையத்தில் காணப்படும் முட்டை வகை - சென்ட்ரோலெசித்தல்

* கொனிடியங்களை உற்பத்தி செய்யும் அமைப்பு - பைலைடு

* கழிவு நீக்க மண்டலத்தின் அடிப்படைச் செயல் அலகு - நெஃப்ரான்

* தவளையின் இதயத்தில் காணப்படும் அறைகளின் எண்ணிக்கை - மூன்று

* களைக்கொல்லியாகப் பயன்படுத்தப்படும் செயற்கை ஹார்மோன் - 2,4-D பீனாக்சி அசிட்டிக் அமிலம்

* ஒர் ஆண்டிற்கு ஒரு மனிதனுக்குக் கிடைக்கும் நீரின் அளவில் இந்தியா பெற்றுள்ள இடம் - 133வது இடம்

* உலகிலேயே நிலத்தடி நீரை அதிகமாகப் பயன்படுத்தும் நாடு - இந்தியா

* இந்தியாவில் வன மகோத்சவம் எந்த மாதத்தில் நடைபெறுகிறது - ஜூலை

* கடவுளின் முதற்கோவிலாகக் கருதப்படுவது - காடுகள்

* ஊசியிலைக் காடுகளின் வேறு பெயர் - போரியல் காடுகள்

* புறாவின் விலங்கியல் பெயர் - கொலம்பியா லிவியா

* தக்காளி தாவரத்தின் உயிரியல் பெயர் - லைகோபெர்சிகான் எஸ்குலண்டம்

* தரையொட்டிய நலிந்த தண்டுடைய தாவரத்திற்கு உதாரணம் - ட்ரைடாக்ஸ் (வெட்டுக் காயப்பூண்டு)

* கற்பூரம் எரியும் போது உருவாகும் வாயு - கார்பன் டை ஆக்சைடு

* ஒளிச் சேர்க்கை என்பது - வேதியல் மாற்றம்

* இயற்பியல் மாற்றம் - பதங்கமாதல்

* வேதியியல் மாற்றம் - இரும்பு துருப்பிடித்தல்

* பொதுவாக மாசு கலந்த சேர்மத்தின் கொதிநிலை - தூய சேர்மத்தின் கொதிநிலையை விட அதிகம்

* யூரியாவின் உருகு நிலை - 135o C

* இரும்பு துருபிடித்தல் என்பது - ஆக்சிஜனேற்றம்

* இரப்பையில் ஏற்படும் அதிகப்படியானஅமிலத் தன்மையைக் கட்டுப்படுத்தப் பயன்படும் வேதிவினை - நடுநிலையாக்கல்

* இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபினைப் பாதிக்கக்கூடிய வாயு - கார்பன் மோனாக்சைடு

* புரதச் சேர்க்கையில் பயன்படுவது - நைட்ரஜன்

* நீரேறிய காப்பர் சல்பேட்டின் நிறம் - நீலம்

* எத்தில் ஆல்கஹாலின் கொதிநிலை - 78o C

* பாரபின் மெழுகின் உருகுநிலை - 54o C

* ஹைட்ரோகுளோரிக் அம்லம் எக்காரத்துடன் வினைபுரிந்து சோடியம் குளோரைடை உருவாக்குகிறது - சோடியம் ஹைட்ராக்சைடு

* நைட்ரஜனும் ஹைட்ரஜனும் இணைந்து அம்மோனியா உருவாதல் வினையின் பயன்படும் நியதி - உயர் வெப்பநிலை

* கடல் நீரைக் குடி நீராக மாற்ற மேற்ரொள்ளப்படும் செயல்முறை - காய்ச்சிவடித்தல்

* அணு என்பது - நடுநிலையானது

* எலக்ட்ரான் என்பது - உப அணுத்துகள்

* நியூட்ரானின் நிறை - 1.00867 amu

* கார்பனின் இணைதிறன் - 4

* பொருளின் கட்டுமான அலகு - அணு

* சோடியத்தின் அணு எண் மற்றும் அணு நிறை முறையே 11 மற்றும் 23 ஆகும். அதிலுள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை - 12

* பனிக்கட்டி போன்ற அசிட்டிக் அமிலம் என்பது - 100 சதவீத அசிட்டிக் அமிலம்

* நங்கூரம் மற்றும் குதிரை லாடம் தயாரிக்கப் பயந்படும் இரும்பின் வகை - தேனிரும்பு

* நீர்ம அம்மோனியாவின் பயன் - குளிர்விப்பான்

* கரும்புச்சாற்றில் உள்ள குளுக்கோசின் சதவீதம் - 30 சதவீதம்

* எரிசாராயத்தை 100 சதவீதம் தூய எத்தனாலாக மாற்றப் பயன்படும் காரணி - சுட்ட சுண்ணாம்பு

* பென்சீன் ஆய்வுக்கூடங்களில் கரைப்பானாகப் பயன்படுவது - நைட்ரஜன்

* சோப்புகளில் உப்பாக உள்ள அமிலம் - கொழுப்பு அமிலம்

* இயற்கையில் தனித்துக் கிடைக்கும் தனிமங்களில் மென்மையானது - கிராபைட்

நன்றி:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்