தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

26.5.12

அரசு பள்ளி மாணவர் "யூனிபார்ம்" கலர் மாற்றம் : பெற்றோர் அதிர்ச்சி

தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையான அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் "யூனிபார்ம்" கலர் இந்த கல்வியாண்டு முதல் மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.


தற்போது 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு வெள்ளை கலர் சட்டையும், காக்கி கலர் பேண்ட்டும் சீருடையாக உள்ளது. ஒரு சில பள்ளிகளில் புளு கலர் பேண்ட்டும், மாணவிகளுக்கு வெள்ளை ப்ளவுஸ், புளு கலரில் பாவாடை, தாவணியும் அல்லது பேண்ட், துப்பட்டாவுமாக உள்ளது. ஆனால், இந்த கல்வியாண்டு முதல் யூனிபார்ம் கலர் மாற்றப்பட்டு, மாணவர்களுக்கு "லைட் ப்ரவுன்' கலர் சட்டையும்,"மெரூன்' கலரில் பேண்ட் அல்லது டிரவுசரும்,மாணவிகளுக்கு ப்ளவுஸ், துப்பட்டா, டாப்ஸ் லைட் ப்ரவுன் கலரிலும், பேண்ட் மெரூன் கலரிலும் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

உதவிபெறும் பள்ளிகளும் தப்பவில்லை: உதவி பெறும் பள்ளிகளில் அந்தந்த பள்ளி நிர்வாகம் தான் மாணவர்களுக்கான யூனிபார்ம் கலரை இதுவரை முடிவு செய்தது. ஆனால், இந்த கல்வியாண்டு முதல் அரசு பள்ளிக்கான யூனிபார்ம் முறையே உதவி பெறும் பள்ளிகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர் அதிர்ச்சி: கோடை விடுமுறை முடிந்து, பெரும்பாலான அரசு பள்ளிகள் ஜூன் 1 ல் திறக்கப்படவுள்ளதால், பெரும்பாலானபெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு செல்ல தயார்படுத்தும் வகையில், பழையகலரிலான யூனிபார்ம்களை ரெடியாக வைத்து உள்ளனர். இந்த நிலையில் யூனிபார்ம் கலர் மாற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "இனி எப்போது துணி எடுத்து யூனிபார்ம் ரெடி செய்ய முடியும்?' என்ற கவலையில் பெற்றோர் ஆழ்ந்துள்ளனர்.

மதுரையை சேர்ந்த உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:அரசு பள்ளி மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 4 செட் சீருடைகளை அரசே வழங்குகிறது. சத்துணவு சாப்பிடாத மாணவர்கள் அதே கலரில் வெளியில் துணி எடுத்து தைத்துக்கொள்ள வேண்டும். அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு கடந்தாண்டு யூனிபார்ம்கள், பள்ளி இறுதி நாட்களில் தான் வழங்கப்பட்டன என்றார்.

நன்றி:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்