தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

30.5.12

கோடை விடுமுறையில் பயிற்சி - ஆசிரியர்களுக்கு 2 நாள்கள் ஈடுசெய் விடுப்பு வழங்க கோரிக்கை

மே 29 முதல் 31 வரை நடைபெறுக்கின்ற முப்பருவ கல்வி முறை, தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை தொடர்பான பயிற்சியில் பங்கேற்று பயிற்சி பெறும் ஆசிரியர்களுக்கு 2 நாள்கள் ஈடுசெய் விடுப்பு வழங்க வேண்டுமெனத் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் க. இசக்கியப்பன், பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

தமிழக அரசு 2012-13-ம் கல்வியாண்டில் 1-8 வகுப்புகளுக்கு முப்பருவ தேர்வுமுறையை அமல்படுத்தியுள்ளது. அதற்கான தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை பயிற்சி தொடக்கக்கல்வித் துறையில் 2011-12-ம் கல்வியாண்டு இறுதியில் (ஏப்ரல் மாதத்தில்) நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் 6,7,8 வகுப்பு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு மட்டும் கோடை விடுமுறையான மே 28-31 நாட்களில் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஏப்ரல் 10ம் தேதி எங்களது அமைப்பின் சார்பில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அவர்களைச் சந்தித்து பயிற்சிகளை 2012 ஜூன் முதல் வாரத்தில் நடத்திட கோரிக்கை விடப்பட்டது. தற்போது விடுமுறை நாளில் பயிற்சி நடத்தப்பட்டதால் பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு 2 நாள்களுக்கு 2012-13ம் கல்வியாண்டில் அந்நாட்களை ஈடு செய்திடும் விதமாக ஈடுகட்டும் விடுப்பு வழங்கிட வேண்டுமென எங்களது அமைப்பின் சார்பில் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்