தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

5.5.12

பிரம்படி கொடுக்கும் ஆசிரியருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

பள்ளி குழந்தைகளுக்கு பிரம்படி போன்ற கடுமையான தண்டனை கொடுக்கும் ஆசிரியர்களுக்கு அதிகபட்சம் 7 ஆண்டு சிறை தண்டனை அளிக்கும் வகையில் சிறுவர்கள் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பள்ளிகளில் ‘கார்பரேட் பனிஷ்மென்ட்’ எனப்படும் பிரம்படி தண்டனைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிறு தவறு செய்யும் மாணவர்களுக்கும் பள்ளிகளில் பிரம்படி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

கடந்த 2010ம் ஆண்டு 7 மாநிலங்களில் சுமார் 6 ஆயிரம் மாணவர்களிடம் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கமிஷன் ஆய்வு நடத்தியது. இதில் 99 சதவீத மாணவர்கள் பள்ளிகளில் கடுமையான தண்டனையை சந்தித்து வருவதாக புகார் தெரிவித்திருந்தனர்.

இதை தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தண்டனையை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சிறுவர்கள் பாதுகாப்பு சட்டத்தை குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் என பெயர் மாற்றம் செய்யவும், அதில் பல்வேறு புதிய அம்சங்களை சேர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறிய அளிவில் காயம் ஏற்படுத்தும் பிரம்படி தண்டனைக்கு ஒரு வருட சிறை தண்டனையும், அந்த தவறை மீண்டும் செய்தால் 3 வருட சிறை தண்டனை அளிக்கவும் சட்டதிருத்தம் செய்யப்படுகிறது. இரண்டாவது முறை தவறு செய்யும் போது பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யவும் சட்டதிருத்தம் கொண்டு வரப்படுகிறது.

மாணவர்கள் மனதளவிலும், உடல் ரீதியிலும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் வகையில் தண்டனை வழங்கும் ஆசிரியர்களுக்கு 5 வருட சிறை தண்டனையும், இதே தவறை இரண்டாவது முறை செய்தால் 7 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நன்றி:






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்