எட்டு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க கன்னியாகுமரி மாவட்டக் கிளை சார்பில் நாகர்கோவில் முதன்மைக் கல்வி அலுவலகம் முன் (03.02.2011) ஆர்பாட்டம் நடைபெற்றது..
கோரிக்கைகள்:
- அனைத்து நிலை இடைநிலை ஆசிரியர்களுக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் மற்றும் வீட்டு வாடகை உள்ளிட்ட அனைத்து படிகளும் வழங்க வேண்டும்.
- அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை , மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் முடிவுறு பணித்தொகுதியாக மாறிவிட்ட நிலையில் அனைவரையும் பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும்.
- உயர், மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர் பதவி உயர்வு பெறும் போது அந்த பணியிடம் பட்டதாரி பணியிடமாக அரசாணை 100-ன் படி மாற்றப்படுவதால், பதவி உயர்வு பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அதே இடத்தில் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
- இடைநிலை கல்வித்திட்டத்தின் கீழ் துவங்கப்படும் உயர் நிலைப்பள்ளியில் உருவாக்கப்படும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் உரிய விகிதாசார அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.
- SLB மே.நி.ப இடைநிலை ஆசிரியர் திரு. செல்வராஜ் என்பவரின் முறையற்ற மாறுதலை ரத்து செய்து உயர்நீதிமன்ற ஆணைப்படி மீள பணியமர்த்த கல்வித்துறை உரிய ஆணை உடனடியாக வழங்கவேண்டும்.
- பதவி உயர்வுக்கு விகிதாசாரத்திற்கு பற்றhக்குறை ஏற்படும் பாடங்களுக்கு கூடுதல் முன்னனுரிமை பட்டியல் தயாரித்து பதவி உயர்வு வழங்க வேண்டும்.
- பள்ளி ஆண்டாய்வின் போது CEO, DEO தவிர வழக்கத்திற்கு மாறாக BRTE ஆய்வு செய்வதையும், தரக்குறைவாக பேசுவதையும் தவிர்க்கப்பட வேண்டும.
- அரசு பள்ளிகளுக்கு வழங்குவது போன்ற அனைத்து பணபயன்களும் காலம் தாழ்த்தாமல் உதவி பெறும் தனியார் பள்ளிகளுக்கும் வழங்கப்பட வேண்டும்.
கோரிக்கைகளாக விளக்கி மாவட்ட செயலாளர் பாஸி, பூதலிங்கம்பிள்ளை ஹெட்பர்ட் ராஜா ஆகியோர் பேசினர். ஆதிமணி தலைமை தாங்கினார். எட்வின் பிரகாஷ், ஹாஜா, ஹெர்பர்ட், அனில்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக