மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பின் நடந்த பிறப்பு, இறப்புகளை மார்ச் 5 க்குள் கணக்கெடுத்து அனுப்ப சென்சஸ் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் 2011ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பிப். 9 முதல் துவங்கி நாளை முடிவடைகிறது.
இதுபற்றி சென்சஸ் கமிஷனின் உத்தரவு: மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பின், பிறப்பு, இறப்புகள் இருந்தால் அந்த விபரங்களை, மார்ச் 5ம் தேதிக்குள் கணக்கெடுக்க வேண்டும். இவற்றை மேற்பார்வையாளர்கள் சரிபார்த்து மாநில சென்சஸ் கமிஷனுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளது.
உள்ளாட்சி அமைப்புகள் முறையாக வீடுகளுக்கு கதவு எண்கள் வழங்காததால் கணக்கெடுப்பாளர்கள் மிகுந்த அலைச்சலுக்கு உள்ளாகினர். வீடுகள் கணக்கெடுப்பில் விடுபட்டவர்கள் அல்லது தங்கள் பகுதிக்கு கணக்கெடுக்க ஆட்கள் வரவில்லை என தெரிந்தால் சம்மந்தப்பட்ட தாசில்தாருக்கு போனில் சரியான முகவரியை தெரிவிக்கலாம். இத்தகவல் கணக்கெடுப்பாளருக்கு தெரிவிக்கப்படும். அவர், அதை பதிவு செய்வார்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் அதற்கான தனிபட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படுவர் எனவும் சென்சஸ் கமிஷன் தெரிவித்துள்ளது.
நன்றி:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக