தமிழ்நாடு அரசு ஊழியர் – ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 17-ந் தேதி மாலை 6 மணியளவில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் - ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் கோரிக்கைகள் வருமாறு :
- அரசு துறை மற்றும் பள்ளி கல்லூரிகளில் காலியாக உள்ள பணிகளை நிரப்ப வேண்டும்..
- இனிவரும் காலங்களில் தனியார் நிறுவங்களின் மூலம் பணியமர்த்தும் அவுட்சோர்சிங் உள்ளிட்ட இது போன்று நியமனம் கைவிட பட வேண்டும்
- குறைந்தபட்ச ஒய்வுஊதியம் ரூ 3500/- வழங்கிட வேண்டும்
- பெண்களுக்கு 180 நாட்கள் மகப்பேறு விடுப்பு ,குழந்தைகளை பரமாரிதல் சிறப்பு விடுப்பு வழங்கிட வேண்டும்
- மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான படிகளை வழங்க வேண்டும். ஊதியக் குழு மாற்ற அறிவிப்பு, ஒரு நபர் குழுவின் அறிவிப்பால் பெரும்பாலான ஊழியர்கள் ஏமாற்றமடைந்துள்ளதால் அதிலுள்ள குறைகளை நீக்க வேண்டும்.
- அரசுத் துறையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
- சிறப்பு காலமுறை ஊதிய விகிதங்களில் பணியாற்றிவரும் அனைத்து ஊழியர்களுக்கும் காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு ஏற்கெனவே நடைமுறையிலுள்ள ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்
என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்- ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இதில் சுமார் 500 பேர் கலந்துகொண்டுள்ளனர்.
நன்றி:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக