தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

9.2.11

அரசு ஊழியர்-ஆசிரியர்கள் தொடர் இயக்கம் நடத்த முடிவு

அரசு ஊழியர்-ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு தங்களது பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி தொடர் இயக்கம் நடத்த முடிவு செய் துள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கம், மூட்டா, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு தனியார் கல்லூரி அலுவலர் சங்கம், அரசுக்கல் லூரி ஆசிரியர் மன்றம், தமிழ் நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு முது நிலை பட்டதாரி ஆசிரியர் கழ கம், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம், பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், அரசுக்கல்லூரி கவுரவ விரிவுரையாளர் சங்க நிர்வாகிகள், தமிழக முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் தங்களது பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தி யுள்ளனர்.

அரசுத்துறை மற்றும் பள்ளி, கல்லூரிகளில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் உடனடியாக நிரப்பிட வேண்டும். அரசுத்துறைகள், பள்ளி கல்லூரிகளில் தற்காலிகம், ஒப்பந்தம், தொகுப்பூதியம், மணி நேரம், தினக்கூலி ஆகிய முறைகளில் தற்போது பணி யாற்றிவரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்து, ஊதியக்குழுவால் வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியத்தில் உள்ள அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். வரும் காலங்களில் தனியார் நிறுவனங்களின் மூலம் பணியமர்த்தப்படும் அவுட்சோர்சிங் உள்ளிட்ட இதுபோன்ற நிய மனங்களை முற்றிலுமாக கை விட்டு வேலைவாய்ப்பகம், தேர்வாணையம் போன்ற சட்டப்பூர்வமான அமைப்பின் மூலம் மட்டுமே நிரப்பவேண்டும்.

மத்திய அரசுக்கு இணை யாக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களை பொறுத்தமட்டில் அனைவருக்கும் ஒரு மாத ஊதியம் போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளையும் வலியுறுத்தியுள்ளனர்.

பதவி உயர்வின்போது ஊதிய நிர்ணயத்தில் குறைந்த பட்சம் 6 சதவீதம் வழங்க வேண்டும். மருத்துவக்காப்பீட்டுத் திட்டத்தை ஏற்று நடத்த வேண்டும் அல்லது இந்திய பொதுத்துறை காப்பீட்டு நிறு வனங்கள் மூலம் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.

இக்கோரிக்கைகளுக்காக பிப்ரவரி 17ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துவது என்றும், மார்ச் 5ம் தேதி கோரிக்கைகளை விளக்கி மாவட்ட அளவில் கருத்தரங்கம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நன்றி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்