அரசுத் துறை மற்றும் பள்ளி, கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வியாழக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் ந.காத்தமுத்து தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சங்கர சுப்பிரமணியன், மூட்டா மண்டல அமைப்பாளர் ரவிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரசுத் துறைகள், பள்ளி, கல்லூரிகளில் தாற்காலிகமாகவும், ஒப்பந்த அடிப்படையிலும் பணியாற்றிவருபவர்களுக்கு பணி நிரந்தரம் செய்து, ஊதியக் குழுவால் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். மத்திய அரசுக்கு இணையாக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 1.1.2006 முதல் ஊதிய மாற்ற பணப்பலன் நிலுவைத் தொகையுடன் உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத் தலைவர் நீலமேகம் சிறப்புரையாற்றினார்.
நன்றி:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக