தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் பல் பாதுகாப்பு திட்டத்தை, மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட ஒரு ஒன்றியத்தில், முதல் கட்டமாக செயல்படுத்தப்படுகிறது.
பள்ளிகளில் மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு பல் பாதுகாப்பு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது. மாவட்டங்களில் தேர்வு செய்யப்பட்ட ஒரு ஒன்றியத்தில் மட்டும், இத்திட்டம் முதல் கட்டமாக செயல்படுத்த உள்ளது. இதில் மாவட்டம் தோறும் உள்ள மருத்துவ அதிகாரிகள், பல் டாக்டர்கள், ஆசிரியர்களுக்கு, திட்ட செயலாக்கம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், பள்ளியில் குழந்தைகளின் பல் நோய்கள் குறித்து ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மாணவர்களை கண்டறிவர்.
இவர்களுக்கு பிப்.,14 முதல் 24 வரை பல் டாக்டர்கள், சுகாதாரத்துறை ஆய்வாளர்கள், மருந்து, மாத்திரை வழங்குவர்.பிப்.,25 முதல் 28 வரை சொத்தை பல் உடைய குழந்தைகளுக்கு பல் பிடுங்குதல், குழி விழுந்த பற்களை நிரப்புதல் போன்ற பணிகள் அருகில் உள்ள சுகாதார நிலையத்தில் மேற்கொள்ள வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. முதல் கட்ட பணிகள் முடிந்த பின் அனைத்து ஒன்றியங்களிலும் ஜூன், ஜூலை மாதங்களில் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
நன்றி:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக