தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

27.2.11

ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பி.எஸ்.என்.எல்., "சிம்கார்டு'

தமிழக சட்டசபை தேர்தலில், 54 ஆயிரம் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, பி.எஸ்.என்.எல்., "சிம்கார்டு'கள் வழங்கப்பட உள்ளன.

தமிழகத்தில், சட்டசபை தேர்தலுக்காக, 54 ஆயிரம் ஓட்டுச்சாவடிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் ஓட்டுச்சாவடி அலுவலர் நியமிக்கப்படுவர். இவர்களுக்கு, தேர்தல் கமிஷன் வாங்கியுள்ள பி.எஸ்.என்.எல்., குரூப், "சிம் கார்டு' வழங்கப்படும். இவர்களைத் தவிர, மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் உட்பட, வேறு யாருக்கும், ஓட்டுச்சாவடிக்குள் மொபைல்போன் பயன்படுத்த அனுமதியில்லை.

ஓட்டுப் பதிவு நடைபெறுவது குறித்து, ஓட்டுச் சாவடி அலுவலர்கள், ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை, தேர்தல் கமிஷனுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்ப வேண்டும். வேறு யாருக்கும் தகவல் தர வேண்டியதில்லை. மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டருக்கு கூட, சென்னை தேர்தல் கமிஷனிலிருந்து மட்டுமே, ஓட்டுப்பதிவு குறித்து தகவல் தெரிவிக்கப்படும்.

தேர்தல் நேரத்தில் அனைத்து தகவல்களையும், தேர்தல் கமிஷனே முதலில் பெற வேண்டும் என்பதால், இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும், "வெப்கேமரா'வும் பொருத்தப்படவுள்ளது.

நன்றி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்