தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

7.2.11

சாஸ்த்ராவில் பி.எட். படித்த 500 ஆசிரியர்களுக்கு உரிய சலுகை வழங்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

அஞ்சல் வழியில் பி.எட். படித்த 500 ஆசிரியர்களுக்கு உரிய சலுகை வழங்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகம் அஞ்சல் வழி பி.எட். படிப்பு நடத்தி வருகிறது. அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக பணியாற்றும் சுமார் 500 ஆசிரியர்கள் சேர்ந்து படித்து பட்டம் பெற்றனர். அஞ்சல் வழி பட்டத்துக்கு பதவி உயர்வு சலுகை வழங்க முடியாது என தமிழக அரசு அறிவித்தது.

இதை எதிர்த்து 500 ஆசிரியர்களும் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஆசிரியர்கள் சார்பாக வக்கீல் சந்திரசேகர் ஆஜரானார். வழக்கை நீதிபதி வினோத்குமார் சர்மா விசாரித்து, ‘அஞ்சல் வழியில் பி.எட். பட்டப்படிப்பு நடத்த சாஸ்த்ரா பல்கலைக்கு மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அங்கீகாரம் வழங்கியுள்ளது. பல்கலைக்கழக மானியக்குழுவும் அங்கீகாரம் வழங்கியுள்ளது. எனவே சாஸ்த்ரா பல்கலையில் அஞ்சல் வழியில் பி.எட். படித்த 500 ஆசிரியர்களுக்கு அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும்’ என அரசுக்கு உத்தரவிட்டார்.

  
நன்றி:                                               

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்