தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

21.2.11

அரசு ஊழியர், ஆசிரியர் சங்கம்தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்நடந்தது.

அரசுத்துறை மற்றும் பள்ளி, கல்லூரிகளில் காலியாக உள்ள 3 லட்சம் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் சத்துணவு, அங்கன்வாடி, பஞ்., எழுத்தர், மக்கள் நலப்பணியாளர்கள், வருவாய் கிராம ஊழியர்களுக்கும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகம், அரசு தேர்வாணயம் மூலமே காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை வாபஸ் பெற வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ராஜாஜி பூங்கா அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. 

மூட்டா நெல்லை மண்டலத் தலைவர் நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் டெரன்ஸ் முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முத்தையா, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேசன், மாவட்ட துணை தலைவர் ராமமூர்த்தி, தனியார் கல்லூரி அலுவலர் சங்க மண்டல செயலாளர் சுப்பிரமணியன், அரசுப் பணியாளர் சங்க மாநில செயலாளர் எட்வர்டு ஜெயசீலன், இடைநிலை ஆசிரியர் சங்க மாநில துணைத் தலைவர் நெடுஞ்செழியன், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் முஜிபுர், அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில செயலாளர் அந்தோணியம்மாள் ஆகியோர் பேசினர். 

நன்றி



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்