தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

6.2.11

நெல்லையில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லையில் இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரசு, அரசு உதவி பெறும் உயர், மேல்நிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் அனைவரையும் பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதிய உயர்வு மற்றும் இதர சலுகைகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நேற்று(03-02-2011) மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் நிம்ரோத் தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் வெங்கடேசன், துணைத் தலைவர் பாபு முன்னிலை வகித்தனர். நிதி காப்பாளர் செல்வின் வரவேற்றார். கோரிக்கைகளை விளக்கி மாநில அமைப்பு செயலாளர் இசக்கியப்பன் பேசினார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் கணபதி, மாவட்ட அரசு ஊழியர் சங்க செயலாளர் சங்கரவேலாயுதம், தமிழ்நாடு உயர், மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாவட்ட செயலாளர் பசூலுல்ஹக், தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாவட்ட செயலாளர் மனோகரன், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முருகேசன் உட்பட பலர் பேசினர்.

போராட்டத்தை முடித்து வைத்து மாநில ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொது செயலாளர் போத்திலிங்கம் பேசினார்.  மாவட்ட பொருளாளர் செல்வின் அமிர்தராஜ் நன்றி கூறினார். கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களும் எழுப்பபட்டன. இதில் ஏராளமான ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

நன்றி:


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்