தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

9.2.11

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் துவக்கம்

தமிழகம் முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்று முதல் தொடங்குகிறது.

பிறந்ததேதி உள்ளிட்ட பல்வேறு புதிய தகவல்கள் இந்த கணக்கெடுப்பின் போது கேட்டு பதிவு செய்யப்படுகிறது. பொதுமக்களிடம் பெறப்படும் விபரங்கள், குடும்ப அட்டவணை படிவத்தில் துல்லியமாக பூர்த்தி செய்யப்படும். கணக்கெடுப்பு பணிக்கு, பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்களை அலட்சியப்படுத்தினாலோ, தவறான தகவல் அளித்தாலோ சென்சஸ் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே எச்சரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று துவங்கும் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிகள், பிப்., 28 வரை நடைபெறுகிறது. கணக்கெடுப்பில் மாற்றம், திருத்தம் மற்றும் கூடுதல் தகவல் சேர்க்க, மார்ச் 1 முதல் 5ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

வீடுகளுக்கு வரும் கணக்கெடுப்பாளர்கள் பொதுமக்களிடம் கேட்கும் 29 கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும். அவை:

1. பெயர்,
2. குடும்ப தலைவருக்கு உறவு முறை,
3. இனம்,
4. பிறந்த தேதி மற்றும் வயது,
5. தற்போதைய திருமண நிலை,
6. திருமணத்தின் போது வயது,
7. மதம்,
8. ஷெட்யூல்டு வகுப்பு/ ஷெட்யூல்டு பழங்குடி,
9. மாற்றுத் திறன் (ஊனம்),
10. தாய்மொழி,
11. அறிந்த பிற மொழிகள்,
12. எழுத்தறிவு நிலை,
13. கல்வி நிலையம் செல்பவர்களின் நிலை.
14. அதிக பட்ச கல்வி நிலை,
15. கடந்த ஆண்டில் எப்பொழுதாவது வேலை செய்தாரா.
16. பொருளாதார நடவடிக்கையின் வகை,
17. நபரின் தொழில்,
18. தொழில், வியாபாரம், சேவையின் தன்மை,
19. வேலை செய்பவரின் வகை,
20. பொருளீட்டா நடவடிக்கை,
21. வேலை தேடுகின்றாரா, வேலை செய்ய தயாரா,
22. பணி செய்யும் இடத்திற்கு பயணம்,
23. பிறந்த தேதி,
24. கடைசியாக வசித்த இடம்,
25. இடப்பெயர்ச்சிக்கான காரணங்கள்,
26. நகரத்தில் இடப்பெயற்சிக்கு பின் வசித்து வரும் காலம்,
27.உயிருடன் வாழும் குழந்தைகள்,
28. உயிருடன் பிறந்த குழந்தைகள்,
29. கடந்த ஓராண்டில் உயிருடன் பிறந்த குழந்தைகள்.

கணக்கெடுப்பாளர்கள் கேட்கும் இந்த கேள்விகளுக்கான பதில்களை முன்னதாகவே தயாராக வைத்திருந்து, அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

 நன்றி:


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்