தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

28.4.12

TET வினா விடை - குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் - பொது 10

1. உயர் அறிவாண்மை குழந்தைகளிடம் காணப்படும் உயர்திறமைகள் - உயர் அறிவாண்மை, உயர் செயலாக்கம், உயர் ஆக்கத்திறன்.
2.மாணவர்கள் கற்கும் வேகத்திற்கு வழங்கப்படும் நூல்கள் நிரல் வழிக் கற்றல் நூல்கள்.
3. தனியாள் வேறுபாட்டிற்கு காரணமாக இருப்பது - மரபு மற்றும் சூழ்நிலை
4. தனியார் வேறுபாடுகள் ஆறு பரப்புகளில் காணப்படுகிறது என்று கூறியவர் - டைலர்.
5. மாணவர்களின் சமூகப் பண்புகளை வளர்ப்பதற்கு உதவுவன - அறிவு வளர்ச்சி, ஒழுக்க வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி
6. மாணவர்களிடம் மனநலத்தை வளர்ப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் - இலக்கிய மன்றம் நடத்துதல், கல்வி சுற்றுலா மற்றும் போட்டிகள் நடத்துதல், சாரணர் இயக்கம் போன்றவற்றில் பங்கு கொள்ள செய்வது
7. சரியான இலக்குகளை முடிவு எடுக்க முடியாத நிலையில் ஒருவருக்கு ஏற்படும் போராட்டம் - மனப்போராட்டம்.
8. ஆக்கச் சிந்தனையில் நான்காவது படி - சரி பார்த்தல்.
9. ஆளுமையின் வகைகள் - இரண்டு
10. ஆளுமைக் கூறுகளின் வகைப்பாட்டினை கூறியவர் - ஐஸென்க்
11. ஆளுமையைத் தோற்றுவிக்கும் காரணிகள் - இரண்டும்.
12. ஆளுமையை தோற்றுவிக்கும் காரணிகள் - உயிரியல் காரணிகள், சமூகவியல் காரணிகள், உளவியல் காரணிகள்
13. மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் தரும் என்று கூறியவர் - திருவள்ளுவர்.
14. ஆளுமை என்பது ஒருவரது பண்புகளின் தனித்தன்மை வாய்ந்த அமைப்பு என்று கூறியவர் - கில்போர்டு
15. ஆளுமை என்பது மனிதர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட சூழ்நிலையில் என்ன செய்வார்கள் என்பதை முன்கூட்டியே அறிய உதவுவது - கேட்டல்.
16. மனிதர்கள் தங்களின் சூழ்நிலைக்கேற்ப ஏற்படுத்திக் கொண்ட பொருத்தப்பாடு, நிலையான பழக்கங்கள் இவற்றின் ஒருங்கிணைப்பே என்று கூறியவர் - கெம்ப்
17. மனநலம் என்பது மனநிறைவு, மனவெழுச்சி, முதிர்ச்சி, பொருத்தப்பாடு எனக் கூறுபவர்கள் - உளவியலறிஞர்கள்.
18. ஒரு மாணவன் பள்ளியில் பக்கத்து மாணவனின் புத்தகத்தை திருடுவது - பிரச்சினை நடத்தை.
19. சிறந்த மன நலன் உள்ள ஆசிரியர்களால் மட்டுமே - நல்ல மநிலை உள்ள மாணவனை உருவாக்க முடியும்.
20. மாணவர்களின் நுண்ணறிவு, ஆக்கத்திறன் போன்றவை - உள்ளார்ந்த ஆற்றல்கள்.
21. சமுதாயத்தில் சுருங்கிய இலட்சிய பதிப்பாக செயல்படுவது - பள்ளி
22. மனநலம் என்பது ஒருவனது ஆளுமையின் நிறைவான இசைவான செயற்பாட்டை குறிப்பது என்று கூறியவர் - ஹேட்பீல்டு
23. ஒருவரின் மனநலத்தை தீர்மானிக்கும் காரணிகள் - நான்கு
24. ஒருவர் நடத்தை பிறழ்ச்சிகள் ஏதுமின்றி, பிறரோடு இணைந்து போகும் தன்னிணக்கமே மன நலம் என்று கூறியவர் - மார்கன் கிங்
25. மனநலமுடையோரின் நடத்தைகள் யாவன?
26. வாழ்க்கையில் குறிக்கோள்களையும், இலட்சியங்களையும் பெற்றிருப்பவர், நுண்ணறிவும், சரியான முடிவுகளை மேற்கொள்பவர், நகைச்சுவை உணர்வு, தன்னம்பிக்கை மற்றும் சமூகப் பொருத்த பாட்டினை பெற்றிருப்பவர்.
27. ஒருவரது மனநலத்தை தீர்மானிப்பவை - மரவு வழிக் காரணிகள், உடல் நலக் காரணிகள், குழந்தைப் பருவத்தில் அடிப்படை தேவைகளில் திருப்தி.
28. தனக்கும் மற்றவர்களுக்கும் பயனும், மகிழ்ச்சியும் விளைகின்ற வாழ்க்கையில் எல்லா சூழலிலும் பொருத்தப்பாடு செய்து கொண்டு, மகிழ்ச்சியாக வாழ்பவர்கள் - மனநலமுடையோர்.
29. உளவியலின் அடிப்படையில் மன நலம் என்பது - மனநிறைவு பெறுதல், மனவெழுசி, முதிர்ச்சி பெறுதல், சூழலுடன் பொருத்தம்பாடு செய்தல் போன்றவை.
30. ஒரு குறிக்கோளை அடைய முடியாமல் தடுக்கப்படும் போது மனசிதைவு ஏற்படுகிறது என்று கூறியவர் - மார்கன் கிங்

நன்றி:


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்