தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

24.4.12

முப்பருவ தேர்வு முறை: 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு ஜூன் முதல் வாரத்தில் பயிற்சி

முப்பருவ தேர்வு முறை திட்டம் தொடர்பாக 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாநிலம் முழுவதும் வரும் 26ம் தேதி மற்றும் 27ம் தேதிகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் இப்பயிற்சி நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் 2012-13ம் கல்வி ஆண்டில் ஒன்றாம் வகுப்பு 8ம் வகுப்பு வரை தமிழக அரசு முப்பருவ தேர்வு முறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான மார்க் மற்றும் மதிப்பீடு செய்வது தொடர்பான பயிற்சி வகுப்புகள் வரும் மே மாதம் நடத்தப்படுவதாக இருந்தது.

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில அமைப்பு செயலாளர் இசக்கியப்பன், பொது செயலாளர் குமரேசன், சென்னை மாவட்ட தலைவர் கயத்தாறு, காஞ்சிபுரம் மாவட்ட தலைவி ஜெயராணி ஆகியோர் மாநில ஆசிரியர் மற்றும் பயிற்சி துறை இயக்குனர் தேவராஜனை சந்தித்து, ""வரும் மே மாதத்தில் பி.எட் பயிற்சி வகுப்புகள், பல்கலைக் கழக தேர்வுகள் நடப்பதால் ஆசிரியர்கள் அனைவரும் அதற்கான பணியில் ஈடுபட்டிருப்பர், எனவே, மே மாதத்திற்கு பதிலாக இந்த மாத இறுதிக்குள்ளோ ஜூன் மாதத்தில் முதல் வாரத்திலோ நடத்த வேண்டும்' என வலியுறுத்தினர்.

இதன் அடிப்படையில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு மாநிலம் முழுவதும் ஒரு நாள் பயிற்சி வரும் 26 மற்றும் 27ம் தேதிகளில் நடத்தப்படுகிறது. 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி விடைத்தாள் திருத்தும் பணி நடப்பதால் வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் இப்பயிற்சி நடத்தப்படுகிறது.

இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு, தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.

நன்றி:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்