தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

13.4.12

கல்வி உரிமை சட்ட நிபந்தனையை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு

‘மத்திய அரசின் கல்வி உரிமை சட்ட நிபந்தனைகளை எதிர்த்து சிறுபான்மை கல்வி நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மேலப்பாளையம் ரகுமான்யா மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஹசன்அபுபக்கர், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு
:
அரசியலமைப்பு சட்டம் 30வது பிரிவில் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு அரசு இடையூறு செய்யக்கூடாது என கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் கட்டாய இலவச கல்வி சட்டம், அதன் அடிப்படையில் தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ஆகியன சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளுக்கு எதிராக அமைந்துள்ளது.
மத்திய அரசின் கல்வி உரிமை சட்டத்தில், 1 முதல் 8ம் வகுப்பு வரை குழந்தைகளுக்கு கட்டாய இலவச கல்வி வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு நிபந்தனைகள் கூறப்பட்டுள்ளன. அரசு உதவி பெறும், உதவி பெறாத அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மாணவர்களின் பெற்றோரின் கல்விதரத்தை ஆராயக்கூடாது, மாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெற வேண்டும், எந்த மாணவரையும் சேர்க்கமாட்டோம் என கூறக்கூடாது, பள்ளி நிர்வாகக்குழு அமைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு நிபந்தனைகள் சட்டத்தில் உள்ளன. இந்த நிபந்தனைகளை பின்பற்ற தமிழக அரசும் அரசாணை வெளியிட்டுள்ளது. இவை சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் உரிமையை பறிப்ப தாகும். கல்வி உரிமை சட்டத்தில் உள்ள சிறு பான்மை கல்வி நிறுவனங்களை பாதிக்கும் நிபந்தனைகளையும், அதன் அடிப்படையில் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையும் செல்லாது என அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுவை நீதிபதி கே.வெங்கட்ராமன் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வக்கீல் அஜ்மல்கான் ஆஜரானார். மனுவுக்கு பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். விசாரணை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நன்றி:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்