"தகுதியுள்ள அனைத்து மாணவர்களும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பள்ளிக் கல்வித் துறை இயக்குனருக்கு, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள சில தனியார் பள்ளிகள் மற்றும் சென்னை பள்ளிகள் (மாநகராட்சிப் பள்ளிகள்), காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் குறைந்த மதிப்பெண் எடுத்துள்ள பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, இன்று நடக்கும் பொதுத் தேர்வை எழுத அனுமதி மறுத்துள்ளன என, நேற்று செய்தி வெளியானது.
இது தொடர்பாக, வழக்கறிஞர் சுதன் என்பவர், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் (பொறுப்பு) பாஸ்கரன் பிறப்பித்துள்ள உத்தரவில், "காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் குறைந்த மதிப்பெண் எடுத்ததற்காக, மாணவர்களை பொதுத் தேர்வு எழுத அனுமதி மறுக்கக்கூடாது. தகுதியுடைய அனைத்து மாணவர்களும், இன்று துவங்கும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்க, பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து, இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி:

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக