தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

7.4.12

இலவச பேருந்து பயணச் சலுகையை ஏப்., 30 வரை மாணவர்கள் அனுபவிக்கலாம்

இலவச பஸ் பாஸ் வைத்துள்ள மாணவர்களை, பஸ்களில் ஏற்றாமல், கண்டக்டர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதாக புகார்கள் வந்துள்ளன. சென்னையில், இதுபோன்ற ஒரு சில சம்பவங்கள், பஸ் கண்டக்டருடன் வாக்குவாதம் ஏற்படுத்துவதாகக் கூறப்பட்டன.

இது குறித்து, போக்குவரத்து துறை அதிகாரி ஒருவரிடம் விசாரித்தபோது, அவர் கூறியதாவது:
இலவச பஸ் பாஸ், ஓராண்டு காலத்துக்கு வழங்கப்படுகிறது. அரசு விடுமுறை நாட்கள் தவிர, அனைத்து நாட்களிலும் மாணவர்கள், இலவசமாக பஸ்களில் பயணம் செய்யலாம்; விடுமுறை நாட்களில், சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்திற்கு மட்டும் விதிவிலக்கு உண்டு.

இந்த ஆண்டுக்கான பயண அட்டையில், ஏப்., 30ம் தேதி வரை பயணச் சலுகையை மாணவர்கள் அனுபவிக்கலாம். அதை மீறி, கண்டக்டர்கள் தகராறு செய்வதாக உரிய புகார்கள் வந்தால், நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்